Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி எவ்வளவு ரன் அடித்தால் வெற்றி கிடைக்கும்..!! கேப் டவுன் டெஸ்ட் வரலாறு என்ன?

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தொடரை தீர்மானிக்க கூடிய போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்தது.

210 ரன்கள்

210 ரன்கள்

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. அதிகபட்சமாக பீட்டர்சன் 72 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதன் மூலம் 13 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

மீண்டும் ஏமாற்றம்

மீண்டும் ஏமாற்றம்

பெரிய இலக்கை அடிக்க வேண்டும் என்று உத்வேகத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது,.தொடக்க வீரர் மாயங் அகர்வால் 7 ரன்களிலும், கே,எல்,ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, 3வது விக்கெட்டுக்கு புஜாரா, கோலி ஜோடி இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது

சீனியர்கள் பொறுப்பு

சீனியர்கள் பொறுப்பு

கோலி , புஜாரா ஆகியோர்களில் யாராவது ஒருவர் விக்கெட்டை வீழ்த்த தென்னாப்பிரிக்க அணிகள் போராடினர். எனினும் தங்களது அனுபவம் மூலம் லாவகமான ஆட்டத்தை எதிர்கொண்டனர். 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 14 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

ஆடுகளம் வரலாறு

ஆடுகளம் வரலாறு

கேப் டவுன் ஆடுகளம் போக போக பேட்டிங்கிற்கு சற்று கடினமாக இருக்கும். இதனால் 4வது இன்னிங்சில் பெரிய இலக்கை துரத்துவது மிகவும் கடினமாகும். கேப் டவுன் ஆடுகளத்தில் வெற்றிக்கரமாக 4வது இன்னிங்சில் துரத்திய இலக்கு 334 ரன்கள் ஆகும். இதனால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தால் இந்திய அணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும்.

Story first published: Wednesday, January 12, 2022, 23:10 [IST]
Other articles published on Jan 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+