மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுகிறார்கள். டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவும் ஒரு நாள் அணி கேப்டனாக கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்பது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசி இருக்கிறார். அது குறித்து தற்போது பார்க்கலாம். ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். மேலும் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகும். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக சோதனைக்கு ஆளாக்கப்படுவார்கள். எனினும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம்.
அவரால் மட்டுமே தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட முடியும். ஏனென்றால் அவர் பேட்டிங் செய்யும்போது பேட்டை மேலோங்கி நிறுத்தி விளையாடுவார். இதுபோன்று சஞ்சு சாம்சன் இந்த தொடரில் நன்றாக விளையாடி ரன்கனை சேர்ப்பார் என நினைக்கிறேன். அவர் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்.
சஞ்சு சம்சன் 2021 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடினார்.
இதுவரை 13 ஒருநாள் போட்டியில் விளையாடி 390 ரன்கள் சேர்த்திருக்கிறார்.104 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. தென்னாப்பிரிக்க தொடர் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது.முதல் டி20 10ஆம் தேதியும், இரண்டாவது டி20 பன்னிரண்டாம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி 14-வது தேதியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி இரண்டாவது ஒரு நாள் போட்டி 19ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.