தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்.. ரஹானே, சர்ஃபராஸ் கான் புறக்கணிப்பு.. இளம் வீரரை தேர்வு செய்த பிசிசிஐ
சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அபினம்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. டிச.26ஆம் தேதி நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனிலும், ஜனவரி 3ஆம் தேதி நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் கேப் டவுனிலும் நடக்கவுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட வென்றதில்லை.

இதனால் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு மருந்தாக தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி தீவிரமாக உள்ளது. இதற்கான 10 நாட்களுக்கு முன்பாகவே இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களுக்கு ஏற்ப பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான குழுவினர் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுடனான 2 போட்டிகளும் முடிவடைந்தாலும் விரலில் ஏற்பட்ட காயம் குணமாகாது என்பதால் அவர் பிசிசிஐ நிர்வாகிகளால் பயிற்சியளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதனால் இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரஹானே அல்லது சர்ஃபராஸ் கான் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவர் என்று பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்திய வீரர்களுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி போட்டியில் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் 61 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அதேபோல் துணை கேப்டனாக இருந்த ரஹானே திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்றே யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் பிசிசிஐ இவர்கள் இருவரையும் புறக்கணித்து பெங்கால் அணியை சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்துள்ளது. இவர் ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ரஞ்சி டிராபி தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அபிமன்யூ ஈஸ்வரன் மாற்று தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, December 23, 2023, 19:27 [IST]
Other articles published on Dec 23, 2023


Click it and Unblock the Notifications