Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: அபிஷேக் ஹாட்ரிக் டக் அவுட்டானது இந்திய அணிக்கு நல்லது தான்.. ரவி சாஸ்திரி கருத்து

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட்டானது இந்தியாவுக்கு நல்ல விசயம் தான் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார். சூப்பர் 8 போட்டிக்கு அணி தயாராகும் நிலையில், இளம் இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து 0 ரன்களில் ஆட்டமிழந்து, இதுவரை ரன் கணக்கைத் தொடங்கவில்லை.

2025 T20I சீசனில் அபிஷேக் சர்மா அதிரடியாகச் செயல்பட்டார். 21 ஆட்டங்களில் ஏறக்குறைய 43 சராசரியுடனும், 193.46 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் ரன்களைக் குவித்தார். இத்தொடரில் அபிஷேக் தடுமாறிய போதிலும், இந்தியா லீக் போட்டிகள் அனைத்திலும் அமோகமாக வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக, ஐசிசி தளத்திற்கு பேசிய ரவி சாஸ்திரி "அபிஷேக் சர்மா மூன்று பூஜ்ஜிய ரன்களைப் பெற்றது ஒரு நேர்மறையாகவே பார்க்கிறேன்."

"எனவே, போட்டியின் முக்கிய காலகட்டங்களுக்காக தனது சிறந்த ஆட்டத்தை அவர் சேமித்து வைத்துள்ளார். அவர் ரன் எடுக்காதது குறித்து எதிரணிகள் சற்று கவலைப்படுவார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் சிறப்பாகச் செயல்பட்டது இந்தியாவிற்கு ஒரு நேர்மறையான விஷயம். இஷான் கிஷன், சில சமயங்களில் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியில். திலக் வர்மா தனது பங்கை சிறப்பாகவே ஆடியுள்ளார். அவர் தொடக்க ரன்களை எடுத்துள்ளார்.ஆனால் அவரது சிறந்த ஆட்டம் இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன்," என்றார்.

இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில், 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ரீப்ளேவாக , தென்னாப்பிரிக்காவை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் எதிர்கொள்ளும். கடைசி லீக் போட்டியான நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று ரவி சாஸ்திரி பரிந்துரைத்தார்.

இந்திய ஆடுகளங்களுக்கு மற்ற 10 வீரர்களும் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றாலும், அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் தொடர்வது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். அக்சர் இந்திய அணியில் வழக்கமான வீரராக இருக்கும் நிலையில், சுந்தர் நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் மட்டுமே இடம்பெற்றார்.

இதுபற்றி பேசிய ரவி சாஸ்த்ரி, ”அதே அணிதான் விளையாடும் என்று நினைக்கிறேன், ஏனெனில் உங்களிடம் ஆழமான பேட்டிங் வரிசை, அனைத்து அம்சங்களையும் சமாளிக்கும் திறன், உள்ளன, உங்களுக்கு ஆப்சன்கள் தேவை. பனிப்பொழிவு இருக்கும் போது, உங்களுக்கு கூடுதல் பந்துவீச்சு ஆப்சன் தேவை," என்றார்.

"அது சிவம் தூபேயாக இருக்கலாம், அல்லது ஹர்திக் பாண்டியா தனது முழு ஓவர்களையும் வீசுவதாக இருக்கலாம், அல்லது திலக் வர்மா ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர்கள் பந்துவீசலாம், உங்களுக்கு இந்த ஆப்சன்கள் தேவை. அணியை அவர்கள் மாற்றியமைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. கடைசிப் போட்டியில் விளையாடிய அணி ஒரு நல்ல அணி," என்றும் சாஸ்திரி கூறினார்.

Story first published: Saturday, February 21, 2026, 18:08 [IST]
Other articles published on Feb 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+