IND vs SA: அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனதற்கு, அவருடைய தங்கை காரணமா? கோலி வீடியோ மூலம் பதிலடி
அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். அபிஷேக் சர்மாவின் இந்த சரிவுக்கு , அவரது சகோதரி கோமல் ஷர்மா மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா நான்கு போட்டிகளிலும் வென்று வலுவாக இருந்தாலும், அபிஷேக்கின் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,
இது அவரது சகோதரி மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக மாறியுள்ளது.ஐசிசி ஆடவர் டி20ஐ பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் 25 வயதான அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் இன்னும் தனது முதல் ரன்னை எடுக்கவில்லை. பிப்ரவரி 7 அன்று மும்பையில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், களமிறங்கிய முதல் பந்திலேயே கோல்டன் டக் முறையில் அவுட்டானார்.

வயிற்றுத் தொந்தரவு காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்காத அவர், கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது லீக் ஆட்டத்தில், சல்மான் அலி ஆகா பந்துவீச்சில் நான்கு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.நெதர்லாந்துக்கு எதிராக இந்தியாவின் நான்காவது ஆட்டத்திலும் அபிஷேக் ஷர்மா ரன் எதுவும் சேர்க்காமல் வெளியேறினார். ஆர்யன் டட் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே அவர் போல்டாகி டக் அவுட்டானார்.
இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் தனது முதல் மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று டக் அவுட்களை (0 (1), 0 (4), 0 (3)) பதிவு செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற விரும்பத்தகாத சாதனையைப் படைத்தார். நடப்பு 2026 ஆம் ஆண்டில், இந்தியாவுக்காக எட்டு டி20ஐ இன்னிங்ஸ்களில் ஐந்து டக் அவுட்களுடன் அவரது பேட்டிங் பலவீனமானது வெளிப்பட்டுள்ளது.
அபிஷேக்கின் இந்த மோசமான ஆட்டத்திற்கு அவரது சகோதரி கோமல் ஷர்மா தான் காரணம் என சிலர் சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி வருகின்றனர். கோமல், ஒரு கிரிக்கெட் ரசிகையாக தனது சகோதரர் விளையாடுவதைப் பார்க்க வழக்கமாக மைதானங்களுக்கு வருவார். தற்போது அவரது இந்த இருப்புதான் அபிஷேக்கின் தடுமாற்றத்திற்குக் காரணம் என ரசிகர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளன.
எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர், "அபிஷேக் ஷர்மாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது சகோதரிதான். அவர் விளையாடச் செல்லும் போதெல்லாம், கவனத்தை ஈர்க்க வருகிறார். மிகையாக நடிக்கிறார். அவர் ஒன்றும் குழந்தை இல்லை. மற்ற வீரர்களுக்கும் சகோதரிகள் உள்ளனர், ஆனால் அவர்கள் இப்படி வருவதில்லை," என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிசியோதெரபி நிபுணராகப் பணிபுரியும் கோமல், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடும் தனது சகோதரனை உற்சாகப்படுத்த பெரும்பாலும் மைதானங்களில் காணப்படுவார். ஆனால், இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் விராட் கோலியின் பழைய வீடியோவை போட்டு. ரசிகர்கள் பதிலடி தந்துள்ளனர்.
அந்த வீடியோவில் கோலி, "நமது நாட்டில் மக்கள் பெண்களைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்," என்று முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார். அதை பதிவிட்டுள்ள ஒரு தரப்பினர் இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்காதீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் மைதானத்தில் தனது தோல்விகளுக்காக அனுஷ்கா ஷர்மா மீது பரப்பப்பட்ட வன்மமான கருத்துகளுக்கு எதிராக விராட் கோலி பலமுறை குரல் கொடுத்துள்ளார். 2016-ஆம் ஆண்டில், தனது காதலி அனுஷ்கா ஷர்மா இலக்காக்கப்பட்டு கேலி செய்யப்பட்டபோது, "அனுஷ்கா ஷர்மாவைத் தொடர்ந்து கேலி செய்யும் நபர்களுக்கு வெட்கம். கொஞ்சம் இரக்கம் தேவை. அவர் எனக்கு எப்போதும் நேர்மறை எண்ணங்களையே கொடுத்துள்ளார்," என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, எச்சரிக்கை விடுத்தார்.
அபிஷேக் ஷர்மாவின் தொடர்ச்சியான மோசமான ஆட்டம், வரவிருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான சூப்பர் 8 போட்டியில் அவரை அணியிலிருந்து நீக்க வழிவகுக்குமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த சூப்பர் 8 போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications