Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வுக்கு பின் திரும்பி பார்த்தால்.. நினைவில் அது ஒன்றுதான் இருக்கும்.. WC தோல்வி பற்றி கேஎல் ராகுல்

கேப் டவுன்: 15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஓய்வுபெற்ற பின் திரும்பி பார்க்கும் போது இருதரப்பு தொடர்களில் அடைந்த வெற்றி ஒருபோதும் நினைவில் இருக்காது என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக உருவாகி வருகிறார் கேஎல் ராகுல். ஐபிஎல் தொடரில் அடைந்த காயத்திற்கு பின் 6 மாதங்களாக ஓய்வில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டார் கேஎல் ராகுல். என்சிஏ-வில் பயிற்சியில் ஈடுபட்ட அவர், கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும், கேப்டனாகவும் முதிர்ச்சியடைந்துள்ளார்.

IND vs SA : After Retirement, World Cups are the only thing that we will remember says KL Rahul

தோனியின் பிரத்யேக குணமே அவரின் எச்சரிக்கை உணர்வு தான். ஒவ்வொரு ஓவருக்கும், ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் உடனடியாக திட்டம் தீட்டுவதோடு, அந்த திட்டம் தோல்வியடைந்தால் உடனடியாக மாற்று திட்டத்தை செயல்படுத்துவது தான். அதன் காரணமாகவே தோனியால் அதிக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடிந்தது.

தற்போது கேஎல் ராகுல் தோனியின் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார். ஆட்டம் எந்த இடத்தில் மாறுகிறதோ, உடனடியாக அதற்கேற்ப விளையாடி வருகிறார். ஆசிய கோப்பை, உலகக்கோப்பை, தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் என்று அத்தனையிலும் கேஎல் ராகுல் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை விடவும், சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டார்.

டிஆர்எஸ் அப்பீலில் கேஎல் ராகுலின் ஒவ்வொரு அட்வைஸ்-ம் இந்திய அணி அவ்வளவு சாதகமாக அமைந்தது. உலகக்கோப்பையில் கூட கேஎல் ராகுல் விக்கெட்டை பறிகொடுக்க கூடாது என்ற எச்சரிக்கையுடன் விளையாடி ஆட்டமிழந்ததே தவறாக முடிந்தது. தற்போது தென்னாப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசியதன் மூலம் கேஎல் ராகுல் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் இருக்கிறார்.

இந்த நிலையில் உலகக்கோப்பையில் அடைந்த தோல்வி குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், வரும் காலங்களில் 10 முதல் 15 ஆண்டுகள் எங்களின் கிரிக்கெட் வாழ்க்கை இருக்கும். ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, இருதரப்பு தொடர்களை வென்றது ஒருபோதும் நினைவில் இருக்காது. உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களை வென்றது தான் நினைவில் இருக்கும். அதனால் தான் உலகக்கோப்பை போன்ற தொடர்களுக்கு கூடுதலாக திட்டமிட்டு உழைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 31, 2023, 16:05 [IST]
Other articles published on Dec 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+