Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஷமிக்கு பதில் ஆகாஷ் தீப் சேர்த்தது ஏன் என இப்போ புரிஞ்சுதா? 10 ரன்னுக்கு 2 விக்கெட்

பெங்களூர்: தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சேர்க்கப்படவில்லை.

ரஞ்சி போட்டியில் மூன்று போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்று இருந்தார். இதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் அடங்கும். இப்படி இருக்கும் போது அவரை அணியில் சேர்க்கப்படாதது ஏன் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

Ind a vs sa a

இதற்கு விளக்கம் அளித்திருந்த அஸ்வின், சமி ஓவர்களை வீசிவிட்டு அடிக்கடி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றதாகவும் அவர் மைதானத்தில் 90 ஓவரும் நிற்கவில்லை என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக சமிக்கு பதில் ஆகாஷ் தீப் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆகாஷ் தீப்பை விட அனுபவ சாலியான சமி ஏன் ஓரங்கட்டப்படுகிறார் என்று விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இந்தியா ஏ மற்றும் இடையிலான இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களில் ஆட்டம் இழந்தது. சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரல், அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து தென்னாப்பிரிக்க ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இதில் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீசினர். இதில் ஆகாஷ் கட்டுக்கோப்பாக பந்து வீசியது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஏழு ஓவர்கள் வீசி அவர் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதில் மூன்று ஓவர்கள் மெயிடனாகும். இதேபோன்று சிராஜ் 6 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மறுபுறம் பிரசித் கிருஷ்ணா ஐந்து ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார். குல்தீப் ஏழு ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். சமிக்கு பதில் ஆகாஷ் தீப்பை ஏன் சேர்த்தீர்கள் என்ற கேள்விக்கு தற்போது அவர் தனது பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். மதிய நேர உணவு இடைவெளியின் போது தென்னாப்பிரிக்க அணி 25 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கோல்டன் டக் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 7, 2025, 11:49 [IST]
Other articles published on Nov 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+