Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 ஆண்டுகள்.. பும்ரா, புவனேஷ்வரை பின்னுக்கு தள்ளிய அர்ஷ்தீப் சிங்.. டி20 கிரிக்கெட்டில் இவர்தான் டாப்

சென்சுரியன்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக இந்த சாதனையை அவர் செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா சதம் விளாசி அசத்தினார்.

ind vs sa arshdeep singh tilak varma

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தென்னாப்பிரிக்கா அணியின் 3 முக்கிய பேட்ஸ்மேன்களையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தியுள்ளார்.

ரிக்கல்டன் 20 ரன்களிலும், கிளாசன் 41 ரன்களிலும், மார்கோ யான்சன் 54 ரன்களிலும் அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக அர்ஷ்தீப் சிங் புதிய சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 59 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 92 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன் மூலமாக இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் அர்ஷ்தீப் சிங் 92 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இவருக்கு பின் புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும், பும்ரா 89 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 88 விக்கெட்டுகளுடன் 5வது இடத்திலும் உள்ளார். மேலும் அர்ஷ்தீப் சிங் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் முதன்மை பவுலராக மாறியுள்ள நிலையில், விரைவில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனையை அர்ஷ்தீப் சிங் 2 ஆண்டுகளில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 14, 2024, 7:25 [IST]
Other articles published on Nov 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+