தர்மசலா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். கடந்த போட்டியில் பந்து வீச்சில் தடுமாறிய அவர் இன்று ஜொலித்தார்.
கடந்த போட்டியில் அவர் தடுமாறியதற்கு சொந்த மண்ணில் விளையாடியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.அதனை தற்போது அவர் ஒப்புகொண்டு இருக்கிறார்.ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய அவர் நான் தர்மசாலாவுக்கு வந்தபோது அனைவரும் என்னிடம் வந்து இதுவும் உன்னுடைய சொந்த மைதானம் தான் என்று கூறினார்கள்.

அவர்களிடம் முதலில் நான் கூறியது இல்லை. இது என்னுடைய சொந்த மைதானம் கிடையாது என்பதுதான். இதன் மூலம் நான் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன்.என்னுடைய அடிப்படையான விஷயங்களுக்கு நான் திரும்பி விட்டேன். அடிப்படையிலான விஷயத்தை சரியாக செய்தேன். என்னுடைய திறமையை நம்பி நான் பந்து வீசினேன்.
இது போன்ற பெரிய அளவில் விளையாடும் போது சில சமயம் நாம் திட்டத்தை களத்தில் வெளிப்படுத்த முடியாமல் போகலாம்.கடந்த போட்டி அவ்வாறு தான் எனக்கு மோசமாக அமைந்தது.ஆனால் இன்று நல்ல விதமாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எதையும் மாற்றம் செய்யவில்லை. சரியான இடத்தில் பந்து வீசினேன்.
ஆடுகளத்தில் சில உதவியும் எனக்கு கிடைத்தது. மேலும் தர்மசாலா குளிர்பிரதேசம் என்பதால் பந்தும் நன்றாக ஸ்விங் ஆனது. அதனை பயன்படுத்திக் கொண்டு என்னுடைய திட்டத்தை சிம்பலாக செயல்படுத்தினேன். சரியான இடத்தில் பந்தை வீசினால் அதற்கு ஏற்ற கூலி கிடைக்கும்.ரீசா ஹென்றிக்ஸ் விக்கெட் கிடைக்கும் போது அது அவுட் என்று எனக்கு நன்றாக தெரியும். ஜித்தேஷ் சர்மாவும் ரிவியூ எடுக்க சொன்னார்.
ஆனால் சூரியகுமார் யாதவ் சஸ்பென்ஸ் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடைசி நொடியில் ரிவ்யூ எடுத்தார். பிரவீஸ் விக்கெட்டுக்கும் நான் ரிவ்யூ எடுத்தேன். அது குழப்பத்தால் எடுக்கப்பட்ட முடிவு. பவுலர்கள் எப்போதுமே அனைத்து ரீவியையும் தங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள் கூறினார்.