For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: இந்திய அணி ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் விலகல்.. ஷமி இல்லை, வேறு ஒரு பெங்கால் வீரர் தேர்வு

மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான கடைசி இரண்டு டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் உடல் நல குறைவு காரணமாக பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு நாள் தொடரில் அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்படாத நிலையில் டி20 தொடருக்கு திரும்பி இருந்தார்.

இதில் முதல் டி20 போட்டியில் பேட்டிங்கில் 23 ரன்களும், பந்து வீச்சில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இரண்டாவது டி20 போட்டியில் 21 பந்துக்கு 21 ரன்களும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 27 ரன்களையும் விட்டுக் கொடுத்து இருந்தார்.

Axar Patel

இந்த நிலையில் தர்மசலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அக்சர் பட்டேல் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது இந்த சூழலில் நான்காவது டி20 போட்டி புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில், அவர் அனைத்து திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருடைய உடல் நலம் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் கடைசி இரண்டு போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. எனினும் அக்சர் பட்டேல், அணி கூடவே பயணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் மருத்துவ குழு அக்சர் பட்டேலை சோதனை செய்யும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் அக்சர் பட்டேல் பதிலாக பெங்கால் சென்ற ஆல்ரவுண்டர் சபாஷ் அஹமத் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணிக்காக சபாஷ் அஹமத் மூன்று சர்வதேச ஒரு நாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார். கடைசியாக அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார்.

சையது முஸ்தாக் அலி தொடரிலும் தற்போது சபாஷ் அகமத் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஐந்து போட்டிகளில் விளையாடி வெறும் 60 ரன்கள் பேட்டிங்கில் அடித்திருக்கிறார். பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். சபாஷ் அஹமத் நல்ல ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால், அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்களை குழப்பமடைய செய்திருக்கிறது.முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் டி20 அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்திய நிலையில் சபாஷ் அகமத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Story first published: Monday, December 15, 2025, 20:35 [IST]
Other articles published on Dec 15, 2025
English summary
Ind vs sa- Axar Patel ruled out from Last 2 T20I matches as shabhaaz Ahamed included
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+