Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- நீங்க எல்லாம் மனுசங்களே இல்ல.. ஒரே கேட்ச்சால் ஆட்டத்தையே மாற்றிய அக்சர் பட்டேல்

செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் இதுபோன்ற அதிகமாக ரன் குவிக்கப்படும் போது பில்டிங் என்பது ஒரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமையும்.

ஒரு கேட்சை மிஸ் செய்தாலே ஆட்டத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் அச்சர் பட்டேல் பிடித்த கேட்ச் போட்டியில் போக்கையே மாற்றிவிட்டது. 220 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா துரத்தியது.

ind vs sa axar patel suryakumar yadav hardik pandya

இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது. ஏற்கனவே இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாக சேஸ் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஒரு பத்து முதல் 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதினர். அதற்கு தகுந்தார் போல் தென்னாப்பிரிக்க அணியின் முன்வரிசை வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்து அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் 10 ஓவர் முடிவில் தென்னாபிரிக்க அணி 84 ரன்களில் தடுமாறியது. இதனை அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசன் அபாரமாக விளையாடி 22 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக டேவிட் மில்லர் 18 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த டேவிட் மில்லர் நல்ல தொடக்கத்தை பெற்று ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்த நினைத்தார்.

அந்த சூழலில் தான் ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரின் சிக்ஸருக்கு அடிக்க முயன்ற போது அக்சர் பட்டேல் சிக்ஸர் லைனில் தலைக்கு மேல் சென்ற பந்தை பாய்ந்து ஒரு அபாரமான கேட்சை பிடித்தார். அந்த பந்து மட்டும் சிக்ஸராக சென்று இருந்தால் டேவிட் மில்லர் மற்றும் மார்க்கோ யான்சன் நின்று போட்டியை 19வது ஓவரிலேயே முடித்து இருப்பார்கள். ஆனால் டேவிட் மில்லர் 18 ரன்களில் வெளியேறியதால் மார்க்கோ யான்சன் தனி ஆளாக நின்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

எனினும் யான்சன் 17 பந்துகளில் 54 குவிக்க ஆர்ஸ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சால் ஆட்டம் இழந்தார். இதனால் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அக்சர் பட்டேல் பிடித்த கேட்ச் தான் ஆட்டத்தையே மாற்றிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இதே போல் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்து ஆட்டத்தையே மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 14, 2024, 8:18 [IST]
Other articles published on Nov 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+