மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் மட்டும் டி20 தொடரில் முற்றிலும் இளம் வீரர்களை களமிறக்கினார்கள்.
குறிப்பாக ஒரு நாள் போட்டியில் எந்த ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரும் இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்க வீரர்கள் தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்.

அடிப்பதெல்லாம் 300 ரன்களுக்கு மேல்தான் இன்று தான் விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் அனுபவம் இல்லாத வேகபந்துவீச்சாளர்களை தேர்வு குழுவினர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக களம் இறக்கிறார்கள்.இதனால் நிச்சயம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக ஒரு நாள் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் முகேஷ் குமார்,ஆவேஷ் கான்,தீபக் சாஹர், ஆர்ஸ்தீப் சிங் என 4 வீரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். இந்த நான்கு பேருமே சிக்ஸர் அடிப்பதற்கு ஏதுவாக அளவெடுத்து வைத்தாற்போல் பந்துவீசுவார்கள். இதில் முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் வேகமாக பந்து வீசினாலும் அவர்களது ஓவரில் ரன்கள் அதிகமாக செல்லும்.
இதில் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் கூட இல்லாதது பெரும் பின்னடைவை இந்தியாவுக்கு ஏற்படுத்தும். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் முஹம்மது சிராஜ் தீபக்சாகர் ஆகியோர் இருக்கிறார்கள். அதிலும் முகேஷ் குமார் போன்ற அனுபவம் குன்றிய வீரர்கள் இருக்கிறார்கள்.இது சிராஜ் ஓரளவுக்கு அணியை காப்பாற்றுவார் என நம்பப் பட்டாலும் இந்த பவுலிங் படையை பார்த்தால் ரசிகர்களுக்கு துளியும் நம்பிக்கை வரவில்லை.
இன்னும் எத்தனையோ வேகப்பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களை ஒருநாள் அணியில் பயன்படுத்தியிருக்கலாம். என்று ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளன.விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் நடராஜனை இந்திய அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.