Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தியாவுக்கு அடித்த லக்”.. தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய ‘கை’ உடைந்தது.. மகிழ்ச்சியில் கோலி!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Recommended Video

IND vs SA Test Series: Anrich Nortje ruled out | OneIndia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி தொடங்கவுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெறும் இந்த போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

 முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணிக்கு இந்த போட்டி மானப்பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை. இதேபோல விராட் கோலிக்கும் தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பாகும். எனவே வெற்றி பெற கடின பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

எனினும் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனென்றால் செஞ்சூரியன் பிட்ச்-ல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு ஏற்ற பிட்ச்-ல் பலமானவர்கள். ஆனால் இதுபோன்ற களங்களில் சற்று திணறக்கூடியவர்கள். மணிக்கு 140 கிமீ வேகத்திற்கு மேல் தான் பவுன்சர் பந்துகள் வரும் என்பதால் கடும் சவால் உள்ளது.

 நிம்மதியான செய்தி

நிம்மதியான செய்தி

இந்நிலையில் இந்திய அணிக்கு பெரும் நிம்மதி ஒன்று வந்துள்ளது. அதாவது தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். செஞ்சூரியன் களத்தில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் நிலையாக போடக்கூடியவர் நார்ட்ஜே. இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்களை சாய்த்துள்ளார். அதில் மூன்று முறை 5 விக்கெட்கள் ( 5 wicket hauls )ஆகும்.

ரபாடா கூட்டணி

ரபாடா கூட்டணி

நார்ட்ஜே - ரபாடா கூட்டணி, உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளது. குறிப்பாக இருவரும் ஐபிஎல் தொடரில் இணைந்து விளையாடி இந்திய வீரர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்துவைத்துள்ளனர். தற்போது அந்த ஜோடி பிரிவதால் இந்திய அணி பேட்ஸ்மன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Story first published: Tuesday, December 21, 2021, 17:13 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+