நாங்க இருக்கோம்.. பவுலர்ஸ் கொடுத்த நம்பிக்கை.. நம்பி முடிவு எடுத்த கோலி.. வெளியான தகவல்!

Virat Kohli Breaks the Test records as captain

புனே : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் கேப்டன் கோலி எடுத்த முடிவு அணியை மிகப் பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது.

முதல் டெஸ்டில் வென்று இருந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் களமிறங்கியது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் டாஸ் முதல் இறுதி வரை தென்னாப்பிரிக்க அணிக்கு எந்த விஷயமும் நல்லவிதமாக நடக்கவில்லை. மிகவும் பரிதாபமாகத் தான் இருந்தது அந்த அணியின் நிலை. முதலில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சோர்ந்து போன தென்னாப்பிரிக்கா

சோர்ந்து போன தென்னாப்பிரிக்கா

அப்போதே தென்னாப்பிரிக்கா சோர்ந்து போனது. ஆனால், அதைவிட மோசமாக அடுத்த இரு நாட்களும் கடும் வெயிலில் பந்து வீசி சோர்ந்து போனார்கள். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள்

அடுத்து இரண்டாம் நாள் இறுதி முதல் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் முடிவில் 275 ரன்கள் மட்டுமே எடுத்து தன் முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது.

பாலோ - ஆன் முடிவு

பாலோ - ஆன் முடிவு

அப்போது இந்தியா 326 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 200 ரன்களுக்கும் மேல் முன்னிலை இருந்தாலே பாலோ - ஆன் கொடுத்து எதிரணியை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடுமாறு அழைக்க முடியும்.

சோர்ந்து போக வாய்ப்பு

சோர்ந்து போக வாய்ப்பு

ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு நாள் முழுவதும் பந்து வீசி இருக்கிறார்கள். மறுநாளும் அவர்களை பந்து வீச வைத்தால் அவர்கள் சோர்ந்து போக வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்கா டிரா செய்யும் நோக்கில் ஆடத் துவங்கினால் பெரிய சிக்கலாகி விடும்.

இந்தியா பேட்டிங் ஆடும்

இந்தியா பேட்டிங் ஆடும்

அதனால், கேப்டன் கோலி பாலோ - ஆன் கொடுப்பாரா? என்ற கேள்வி இருந்தது. நான்காம் நாள் 50 - 60 ஓவர்கள் இந்தியா பேட்டிங் செய்து விட்டு பின், தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய இலக்கு நிர்ணயித்து பேட்டிங் ஆட அழைக்கும் என பல விமர்சகர்களும் கூறினார்கள்.

நம்பிக்கை அளித்த பந்துவீச்சாளர்கள்

நம்பிக்கை அளித்த பந்துவீச்சாளர்கள்

ஆனால், அப்போது இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களால் சோர்வடையாமல் பந்து வீச முடியும். நாம் பேட்டிங் செய்துவிட்டு, அவர்களை ஆட வைத்தால், அது அவர்களுக்கு சாதகமாகவும் வாய்ப்பு உள்ளது என கேப்டனிடம் கூறி உள்ளனர்.

பாலோ - ஆன் கொடுத்தார்

பாலோ - ஆன் கொடுத்தார்

அதை நம்பிய கோலி, நான்காம் நாள் காலை வந்தவுடன் பாலோ - ஆன் கொடுத்தார். முதல் இன்னிங்க்ஸில் சரியாக பேட்டிங் செய்யாமல் சோர்ந்து போய் இருந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மீண்டும் பேட்டிங் ஆட வந்த போதும் சொதப்பினர்.

தென்னாப்பிரிக்கா படுதோல்வி

தென்னாப்பிரிக்கா படுதோல்வி

இரண்டாம் இன்னிங்க்ஸில் நம்பிக்கை இன்றி ஆடிய அந்த அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

எடுத்த முடிவு சரிதான்

எடுத்த முடிவு சரிதான்

இந்தியா பாலோ ஆன் கொடுத்த முடிவு சரியாக அமைந்தது. ஆனால், விராட் கோலி இதுபோன்ற சமயங்களில் பாலோ ஆன் கொடுக்க மாட்டார். அப்புறம் எப்படி இந்தப் போட்டியில் மட்டும் பாலோ ஆன் கொடுத்தார்? ஆனால், பந்துவீச்சாளர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் கோலி எடுத்த முடிவு சாதகமாக அமைந்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Bowlers asked Kohli to take follow on decision during second test match. That decision proved to be a good one as India won by an innings and 137 runs.
Story first published: Monday, October 14, 2019, 12:54 [IST]
Other articles published on Oct 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X