Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்.. போட்டி தொடங்கும் நேரம் என்ன? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

சென்சுரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம் மற்றும் எந்த சேனல், ஓடிடியில் பார்க்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தற்போது நாளை இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

IND vs SA Boxing Day Test: When and Where to Watch the INDIA vs South Africa 1st Test Match Telecast and Live streaming

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. கடந்த 2 முறை பயணம் செய்த போது டெஸ்ட் தொடரை கைப்பற்ற மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்த போதும், இந்திய வீரர்கள் தவறவிட்டனர். அதிலும் கடந்த முறை முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் புதிய வரலாறு படைக்க இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அதிக பவுன்ஸ் மற்றும் வேகத்தில் வீசினால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பதே கடினமாகும்.

அதேபோல் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் செஷன் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி 3.30 மணி வரை நடக்கும். அதன்பின் 2வது செஷன் மாலை 4.10 மணிக்கு தொடங்கப்பட்டு 6.10 மணி வரை நடக்கும். அதேபோல் கடைசி செஷன் மாலை 6.30 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு முடிவடையும்.

அதேபோல் இந்த டெஸ்ட் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. ஓடிடி தளத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் இலசவமாக ஒளிபரப்பாக உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளில் விளையாடப்படும் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை நடக்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, December 25, 2023, 8:29 [IST]
Other articles published on Dec 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+