ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்க அணியில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இந்த நிலையில் ரிங்கு சிங்கை களமிறக்காமல் கேப்டன் கே எல் ராகுல் பெரும் ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.
முதல் ஒருநாள் போட்டி நடக்க உள்ள பிட்ச் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் பவுலர்களை நம்புவதை விட, இந்திய அணியும் அதிரடி பேட்டிங்கை தான் நம்ப வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கேப்டன் கே எல் ராகுல், அதிரடி வீரர் ரிங்கு சிங்கை ஆட வைப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் அளித்தார். ரிங்கு சிங் கடந்த இரண்டு டி20 தொடர்களில் தன் அதிரடி பேட்டிங்கால் பல போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து இருக்கிறார். அதே ஃபினிஷர் பணியை ஒருநாள் அணியிலும் செயல்படுவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் வாய்ப்பு பெற்றார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர், கிளாசன் உள்ளிட்ட பல அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் கடைசி 10 ஓவரில் போட்டியை தலைகீழாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள்.
அதே போல இந்திய அணியும் செயல்பட்டால் மட்டுமே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற முடியும். ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சல் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் அவர் முதல் போட்டியில் களமிறங்கி ஆச்சரியம் அளித்தார். துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - கே எல் ராகுல் களமிறங்க உள்ளனர். சஞ்சு சாம்சன் ஆறாம் வரிசையில் ஆட உள்ளார்.
அடுத்து திலக் வர்மா ஐந்தாம் வரிசையிலும், ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையிலும் பேட்டிங் இறங்குவார்கள். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்களை கடந்து ரன் குவித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.