Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர் வீரருக்கு சொல்லிக் கொடுத்த கோலி.. அடுத்த பந்தில் நடந்த அந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ!

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, அணியின் மூத்த வீரருக்கு யோசனை கூறி விக்கெட் எடுக்க வைத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 5௦2 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வந்தது.

அஸ்வின் - ஜடேஜா விக்கெட்கள்

அஸ்வின் - ஜடேஜா விக்கெட்கள்

இரண்டாம் நாளின் முடிவில் 20 ஓவர்கள் இருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட களமிறங்கியது. அஸ்வின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருவரை அவுட் ஆக்கி அசத்தினார். ஜடேஜா நைட் வாட்ச்மேனாக வந்த வீரரை அவுட் ஆக்கினார்.

மூன்றாம் நாள் ஆட்டம்

மூன்றாம் நாள் ஆட்டம்

34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த தென்னாப்பிரிக்கா மூன்றாம் நாள் பேட்டிங் செய்ய வந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின் பந்து வீசத் துவங்கினர். கேப்டன் கோலி விரைவாக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று எண்ணினார்.

கோலி யோசனை

கோலி யோசனை

ஆனால், மூன்றாம் நாளின் முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், கேப்டன் கோலி அடுத்த ஓவரை வீச வந்த இஷாந்த் சர்மாவிடம் மிக தீவிரமாக சில யோசனைகளை கூறினார்.

அடுத்த பந்தில் விக்கெட்

அடுத்த பந்தில் விக்கெட்

சரியாக, 27வது ஓவரின் முதல் பந்தில் டெம்பா பவுமா விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்களை இழந்தது. இந்திய அணிக்கு அது மூன்றாம் நாளின் முதல் திருப்புமுனையாக அமைந்தது.

என்ன தான் சொன்னார்?

என்ன தான் சொன்னார்?

கேப்டன் கோலி அப்படி என்ன தான் சொன்னார்? இஷாந்த் சர்மா பவுமாவுக்கு வீசுகையில் ஆஃப் ஸ்டம்புகளுக்கு வெளியே செல்லுமாறு வீசினார். அந்த பந்துகளை பவுமா எளிதாக தடுத்து ஆடினார்.

விக்கெட் எடுத்தார்

விக்கெட் எடுத்தார்

அதைக் குறிப்பிட்ட கேப்டன் கோலி, ஆஃப் சைடு திசையில் இருந்து பந்து உள்ளே ஸ்விங் ஆகுமாறு வீசக் கூறி இருக்கிறார். அதை செயல்படுத்திய இஷாந்த் சர்மா, பவுமாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

மூத்த வீரர் இஷாந்த் சர்மா

மூத்த வீரர் இஷாந்த் சர்மா

தற்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இஷாந்த் சர்மா தான் மூத்த வீரர் 2007இல் இருந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் அவர் 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். கேப்டன் கோலி 2011இல் இருந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார்.

கோலியின் கேப்டன்சி

கோலியின் கேப்டன்சி

தன்னை விட மூத்த வீரர், அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் என்றாலும் யோசிக்காமல் யோசனை கூறி விக்கெட் எடுக்க வைத்தார் கோலி. அவரது கேப்டன்சி மீது புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கோலியின் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆட்டம் காட்டிய தென்னாப்பிரிக்கா

ஆட்டம் காட்டிய தென்னாப்பிரிக்கா

பவுமா ஆட்டமிழந்த பின் பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை குறி வைத்து தாக்கினார். அதை அடுத்து அந்த அணி 200 ரன்கள் தாண்டி ரன் குவித்து வருகிறது.

வைரல் வீடியோ

விராட் கோலி, இஷாந்த் சர்மாவுக்கு யோசனை சொல்லும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலி சைகை காட்டி, இப்படி பந்து வீசுங்கள் என கூறுவதும், இஷாந்த் அதே போல பந்து வீசுவதும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Story first published: Friday, October 4, 2019, 14:59 [IST]
Other articles published on Oct 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+