Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: முகமது ஷமியை சேர்க்காதது ஏன்? இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் திமிர் பேச்சு

கொல்கத்தா: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன முகமது சமி சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காயம் காரணமாக சமி, கடந்த சில மாதங்களாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

Mohammed shami

இதனால் சமி, இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்வு குழுவினர் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் சமி, உண்மையிலே திறமை வாய்ந்த வீரர் தான். அவரை போல ஒரு சிலர் மட்டுமே நாட்டில் இருக்கின்றனர்.

ஆனால் அதே சமயம் நாங்கள் எந்த மாதிரி பவுலர்களை வைத்து விளையாடுகிறோம் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் எல்லாம் சிறந்த பணியை செய்திருக்கிறார்கள். ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்து வீசிய விதத்தை எல்லாம் நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

பும்ரா, சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது சமி போன்ற வீரர் அணியில் மிஸ் ஆவது உண்மையிலே கடினமான விஷயமாக தான் இருக்கும். ஆனால் இதற்கு தேர்வு குழுவினர் தான் பதில் சொல்ல சிறந்த நபர்கள் என்று நான் நினைக்கின்றேன்.இதேபோன்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடும் போது வேகப்பந்துவீச்சாளர்களின் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்தியாவில் அவருடைய பணி கொஞ்சம் குறைவு தான். இந்தியாவில் பந்து வீசும் போது எத்தனை ஓவர்களை தொடர்ந்து வீச வேண்டும் எப்போது வீச வேண்டும் என்பதையெல்லாம் எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் இருந்தால் எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து பந்து வீசுவார்கள். அப்படி இல்லாத போது அவர்கள் தங்களுடைய பணி சுமையை சேர்ந்த முறையில் நிர்வகிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 13, 2025, 13:44 [IST]
Other articles published on Nov 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+