Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டிய சாஹல், பும்ரா.. அப்படி என்னதான் செஞ்சாங்க? #INDvsSA

Recommended Video

#INDvsSA World cup 2019 | சாஹல் பௌலிங் ! தெறித்த ஸ்டம்புகள்!

சௌதாம்ப்டன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் சாஹல், பும்ராவின் பந்துவீச்சு அச்சுறுத்தும் வகையில் அமைந்தது.

இந்த உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக போராட தயாராக இருந்தது.

எனினும், சாஹல், பும்ராவின் பந்துவீச்சால் அவர்கள் கனவு கலைந்தது. அப்படி என்னதான் செய்தார்கள் அந்த இருவரும்?

முக்கிய விக்கெட்கள்

முக்கிய விக்கெட்கள்

பும்ரா எடுத்த இந்த 2 விக்கெட்களால் தென்னாப்பிரிக்கா முதலில் ஆட்டம் கண்டாலும், பாப் டு ப்ளேசிஸ் - டஸ்ஸன் இணைந்து அணியை மீட்டனர். அப்போது 20வது ஓவரை வீசிய சாஹல், அவர்கள் இருவரையும் தன் லெக் ஸ்பின்னால் திணற வைத்து பௌல்டு அவுட் முறையில் வெளியேற்றினார்.

அழுத்தம்

அழுத்தம்

இந்த இரு விக்கெட்களை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து கடும் அழுத்தத்தில் சிக்கியது. அதன் பின்னும் விடாத சாஹல், டேவிட் மில்லர், பெஹ்ளுக்வாயோ ஆகியோரது விக்கெட்களையும் வீழ்த்தினார்.

ஆட்டிப் படைத்தார்

ஆட்டிப் படைத்தார்

சாஹல் மொத்தமாக 4 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை ஆட்டிப் படைத்தார். தான் வீசிய 10 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் சாஹல். மறுபுறம், பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டார்.

சிக்கனம்

சிக்கனம்

பும்ரா கடைசியாக வீசிய சில ஓவர்கள் தவிர்த்து மற்ற ஓவர்களில் எல்லாம் கடும் சிக்கனம் காட்டினார். 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் அவர். ஒரு மெய்டன் ஓவரும் வீசி இருந்தார்.

பின் வரிசை பேட்டிங்

பின் வரிசை பேட்டிங்

பும்ரா, சாஹல் தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த பின், அந்த அணியின் பின் வரிசை வீரர்கள் பெஹ்ளுக்வாயோ 34, கிறிஸ் மோரிஸ் 42, ரபாடா 31 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200ஐ கடக்க உதவினர்.

ரோஹித் சதம்

ரோஹித் சதம்

தென்னாப்பிரிக்கா அணி 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 122 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Story first published: Thursday, June 6, 2019, 0:02 [IST]
Other articles published on Jun 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+