For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து.. உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்த தல தோனி! என்ன சாதனை? #INDvsSA

Recommended Video

WORLD CUP 2019 IND VS SA | Dhoni stumping | உலகளவில் முதல் இடத்தை பிடித்த தோனி!

சௌதாம்ப்டன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை லீக் போட்டியில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் செய்து மீண்டும் அசத்தியுள்ளார்.

தோனி என்றால் ஸ்டம்பிங் என்றே கூறி விடலாம் என்பது போல அத்தனை அற்புதமான, மின்னல் வேக ஸ்டம்பிங்குகள் செய்து அசத்தியுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், அவருக்குமான புரிதல் எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

இந்தப் போட்டியிலும், சாஹலின் அருமையான சுழற் பந்துவீச்சில் தோனி ஸ்டம்பிங் செய்து தென்னாப்பிரிக்க வீரர் பெஹ்ளுக்வாயோ-வை வீழ்த்தினார். தோனி இந்த ஸ்டம்பிங்கை சிரமப்பட்டு தான் செய்தார்.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

தென்னாப்பிரிக்கா அணி இந்தப் போட்டியில் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 6 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், கிறிஸ் மோரிஸ் - ஆன்டைல் பெஹ்ளுக்வாயோ பேட்டிங் செய்து வந்தனர். பெஹ்ளுக்வாயோ மிக நிதானமாக ரன் சேர்த்து வந்தார்.

முன்னேறி வந்தார்

முன்னேறி வந்தார்

அப்போது 40வது ஓவரை வீசினார் சாஹல். அந்த ஓவரின் 3வது பந்தை பெஹ்ளுக்வாயோ எதிர்கொண்டார். சாஹல் வீசிய லெக் ஸ்பின் வந்த திசையை கணிக்கத் தவறிய அவர், முன்னேறி வந்து பந்தை அடிக்க முயன்றார்.

கடினம்

கடினம்

ஆனால், பந்து பிட்ச் ஆகி லெக் திசையில் அதிக தூரம் திசை மாறிச் சென்றது. தோனி பந்தை கணித்தாலும், பந்து அதிக தூரம் விலகிச் சென்றது. தோனி பந்தை பிடித்த இடத்தில் இருந்து, ஸ்டம்பிங் செய்வது சற்று கடினம்தான். அதற்குள் பேட்ஸ்மேன் சுதாரித்து, கிரீஸ்-க்குள் வந்துவிட வாய்ப்பு இருந்தது.

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

எனினும், தோனி மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஸ்டம்பிங் செய்தார். இதைத் தொடர்ந்து பெஹ்ளுக்வாயோ 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட் வீழ்ச்சி மூலம் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தி உள்ளார் தோனி.

சாதனை

சாதனை

லிஸ்ட் ஏ போட்டிகளில் (உள்ளூர் ஒருநாள் போட்டிகள் + சர்வதேச ஒருநாள் போட்டிகள்) தோனி இந்த ஸ்டம்பிங்குடன் சேர்த்து 139 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில் முதல் இடத்தை, பாகிஸ்தானின் மொயின் கானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் தோனி.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இந்தப் போட்டியில் சாஹல் 4, பும்ரா 2, புவனேஸ்வர் குமார் 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 227 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

Story first published: Wednesday, June 5, 2019, 19:57 [IST]
Other articles published on Jun 5, 2019
English summary
IND vs SA Cricket World cup 2019 : Dhoni’s 139th stumping in List A cricket record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+