Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மின்னல் வேகத்தில் வந்த ஃபுல் டாஸ்.. தெறித்து உடைந்த தவான் பேட்.. ரபாடா மிரட்டல் - வீடியோ

சௌதாம்ப்டன் : தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் ரபாடாவின் மின்னல் வேகப் பந்து, தவானின் பேட்டை உடைத்தது.

2019 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது லீக் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் தவான் வெறும் 8 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா ஆடிய போதே, ஆடுகளம் வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற் பந்துவீச்சு இரண்டுக்கும் சாதகமாக இருப்பது தெரிந்தது.

நிதானம்

நிதானம்

அடுத்து இந்தியா சேஸிங் செய்யத் துவங்கியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் நிதானமாக ரன் சேர்க்க முடிவு செய்து ஆடி வந்தனர்.

பேட் உடைந்தது

ஷிகர் தவான் 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது ரபாடா வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார். லோ ஃபுல் டாஸாக வந்த பந்து, தவான் பேட்டின் கீழ் பகுதியை உடைத்து எறிந்தது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ரபாடா வீசிய அந்த பந்து 147 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. ஷிகர் தவான் பந்தை கணிக்கத் தவறியது தான் பேட் உடைய முக்கிய காரணமாக இருந்தது. தவான் பந்தை தடுக்க முயன்றார். ஆனால், பந்து வந்த திசையை அவரால் சரியாக கணிக்க முடியவில்லை. அந்த அளவு வேகமாக வந்தது பந்து.

மீண்டும் ரபாடா

மீண்டும் ரபாடா

ஒருவேளை பேட்டில் பந்து படாமல் சென்று இருந்தால், ஸ்டம்புகள் தெறித்து, தவான் ஆட்டமிழந்து இருப்பார். 4வது ஓவரின் கடைசி பந்தில் தப்பிய தவான், 5வது ஓவரில் எந்த பந்தையும் சந்திக்கவில்லை. ரபாடா வீசிய 6வது ஓவரின் முதல் பந்தை சந்தித்தார்.

அடுத்த பந்தில்..

அடுத்த பந்தில்..

அந்த பந்தையும் தவான் கணிக்கத் தவறினார். இந்த முறை அவுட்சைடு எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் ஆனது. தவான் 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழந்ததை, ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ரோஹித் சதம்

ரோஹித் சதம்

தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோஹித் சர்மா மிக, மிக நிதான ஆட்டம் ஆடி, சதம் கடந்து, 122 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். தோனி 34 ரன்கள் சேர்த்தும், ராகுல் 26 ரன்கள் சேர்த்தும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

Story first published: Thursday, June 6, 2019, 7:49 [IST]
Other articles published on Jun 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+