Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ஸ்பின் பவுலிங் போட்ட சாஹல்.. ஏமாந்து போன பேட்ஸ்மேன்.. தெறித்த ஸ்டம்புகள்! #INDvsSA

Recommended Video

#INDvsSA World cup 2019 | சாஹல் பௌலிங் ! தெறித்த ஸ்டம்புகள்!

சௌதாம்ப்டன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் விக்கெட் வேட்டை நடத்தி தெறிக்க விட்டார்.

அவரது சுழலை கண்டு குழம்பிப் போன தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையைக் கட்டினர். அவர்களில் டஸ்ஸன் ஆட்டமிழந்த பந்து மிக அற்புதமாக வீசப்பட்டது.

துவக்க வீரர்கள் அவுட்

துவக்க வீரர்கள் அவுட்

தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர்கள் ஹஷிம் ஆம்லா, டி காக் முதல் ஆறு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த டஸ்ஸன் மற்றும் பாப் டு ப்ளேசிஸ் கூட்டணி அமைத்து விக்கெட் விழாமல் ரன் எடுத்து வந்தனர்.

சாஹல் வந்தார்

சாஹல் வந்தார்

அவர்கள் 50 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், இந்திய அணிக்கு கட்டாயமாக ஒரு விக்கெட் தேவைப்பட்டது. அப்போது 20வது ஓவரை வீசினார் சாஹல். டஸ்ஸன் அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்டார்.

கணிக்கத் தவறினார்

கணிக்கத் தவறினார்

அந்த ஓவரின் முதல் பந்து சரியாக வீசப்பட்ட ஒரு லெக் ஸ்பின். அந்த பந்தை கணிக்கத் தவறிய டஸ்ஸன், முன்னேறி வந்து ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால், பந்து வேறு திசையில் வந்து, பிட்ச் ஆகி லெக் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.

ரிவர்ஸ் ஸ்வீப்

ரிவர்ஸ் ஸ்வீப்

டஸ்ஸன் பந்து வரும் முன்னே காலை முன்னே வைத்து ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய தயாராகி விட்டார். அது தான் அவர் மிக மோசமாக பவுல்ட் அவுட் முறையில் ஆட்டமிழக்க முக்கிய காரணம்.

பாப் டு ப்ளேசிஸ் விக்கெட்

பாப் டு ப்ளேசிஸ் விக்கெட்

டஸ்ஸன் ஆட்டமிழந்த அதே ஓவரில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ்-உம் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரும் காலை முன்னே வைத்து, பந்தை அடிக்க முயல பந்து பேட்டுக்கும், பேடுக்கும் இடையே சென்று ஸ்டம்ப்புகளை பதம் பார்த்தது.

பும்ரா விக்கெட்கள்

பும்ரா விக்கெட்கள்

முன்னதாக துவக்க வீரர்கள் ஹஷிம் ஆம்லா, டி காக் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. பும்ராவின் பந்துவீச்சு இந்தப் போட்டியில் மிக அற்புதமாக இருந்தது. அவர் பந்தை சந்திக்கவே தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறினர்.

பும்ரா அசத்தல்

பும்ரா அசத்தல்

பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தியும், கடுமையாக ரன்களை கட்டுப்படுத்தியும் அசத்தினார். மறுபுறம் சாஹல் விக்கெட் வேட்டை நடத்த, தென்னாப்பிரிக்கா அணி கடும் சிக்கலில் சிக்கியது. ஏற்கனவே, தங்கள் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணிக்கு எதிராகவும் தோல்வியை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது.

Story first published: Wednesday, June 5, 2019, 18:50 [IST]
Other articles published on Jun 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+