Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமில் எடுக்காதது கூட பரவாயில்லை.. இது அதை விட மோசம்.. தோனி ரசிகர்கள் அதிர்ச்சி!

Recommended Video

Sourav Ganguly warns Indian team about Dhoni retirement

மும்பை : இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான அணியில் தோனி இடம் பெறவில்லை.

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் கிளம்பின. அதன் பின் அவரே ஒதுங்கி விட்டார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடருக்கான டி20 அணி தேர்வின் போது, இந்திய தேர்வுக் குழுவினர் தோனி குறித்து விவாதிக்கவே இல்லை என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோத உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 15 முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான அணித் தேர்வு நேற்று நடைப்பெற்றது.

உலகக்கோப்பை திட்டம்

உலகக்கோப்பை திட்டம்

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதை மனதில் வைத்து தான் அணித் தேர்வு நடைபெற்றது. பல இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க உள்ளதாக ஏற்கனவே தேர்வுக் குழு அறிவித்து இருந்தது.

தோனிக்கு இடம் கிடைக்குமா?

தோனிக்கு இடம் கிடைக்குமா?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானாகவே விலகிய தோனிக்கு தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி இருந்தது. குறைந்தபட்சம் தோனியின் எதிர்காலம் பற்றியாவது பேசி ஒரு முடிவை தேர்வுக் குழு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இடம் மறுப்பு

இடம் மறுப்பு

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. தோனிக்கு அந்த அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அது தோனி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ரிஷப் பண்ட் தேர்வு

ரிஷப் பண்ட் தேர்வு

ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்றிலும் அவரே முதன்மை விக்கெட் கீப்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசவே இல்லை

பேசவே இல்லை

தோனிக்கு இடம் கொடுக்காதது ஒருபுறம் என்றால், தோனி குறித்து தேர்வின் போது யாருமே பேசவே இல்லை. அவரை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை என ஒரு தகவல் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதற்கு முக்கிய காரணமாக, தோனி இல்லாமல் இந்திய அணியை கொண்டு செல்வது என்ற முடிவுக்கு தேர்வுக் குழு எப்போதோ வந்து விட்டது என்று கூறுகிறார்கள். ரிஷப் பண்ட் சரியாக ஆடவிட்டால் கூட, அடுத்த கட்ட இளம் வீரர்கள் தான் அணிக்குள் இடம் பெறுவார்கள்.

தோனி ஓய்வா?

தோனி ஓய்வா?

தோனி தற்போது ஓய்வில் இருக்கிறார், அவரே விலகி விட்டார் என்று தான் அவரை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதற்கு காரணம் கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் அது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த முறை அது ஒரு கிசுகிசு போலத் தான் கூறப்படுகிறது. அதனால், தோனி கட்டாய ஓய்வில் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி தானாக விலகாத போது கூட அவருக்கு இடம் கிடைக்காது என்பது தோனி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ருனால் பண்டியா, வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி

Story first published: Friday, August 30, 2019, 13:24 [IST]
Other articles published on Aug 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+