Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: சச்சின், விராட் கோலி விளையாடிய இடம் டா அது.. வீணடிச்சிட்டியே தம்பி.. முன்னாள் வீரர் சாடல்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி இருக்கிறது. குறிப்பாக பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் விளையாடிய துருவ் ஜூரல் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், மிகச் சிறந்த வாய்ப்பை ஜூரல் வீணடித்து விட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேனீர் இடைவேளைக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்ற நிலை வந்திருந்தால் நிச்சயம் துருவ் ஜூரல் அந்த சாட்டை ஆடி இருக்கலாம்.

Dhruv Jurel

ஆனால் நிலைமை அப்படி அல்ல. இந்த அணியில் ஒரு பேட்டராக விளையாடக்கூடிய அனைத்து தகுதியும் துருவ் ஜூரல்க்கு இருக்கிறது. ஏனென்றால் அவர் உள்ளூர் போட்டிகளில் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் அந்த ஷாட் ஆடும் போது அவருக்கு கண்ட்ரோல் கொஞ்சம் கூட இல்லை.

பந்து ஆப்சைடில் செல்கிறது. ஆனால் அதை அவர் லெக் சைடில் ஆடியிருக்கிறார். அதுவும் கண்ட்ரோல் இல்லாமல். அப்படி இருக்கும் போது பந்து காற்றில் தான் பறக்கும், அது கேட்ச் ஆக மாறியிருக்கிறது. இதேபோன்று மார்க்கோ ஜான்சன் போன்ற உயரமான பவுலரை எதிர்கொள்ளும் போது கூடுதல் பவுன்ஸ் பந்தில் இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். துருவ் ஜூரல் தமக்கு கிடைத்த மூன்றாவது வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.

சச்சின், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. தற்போது அந்த இடத்தில் கில் விளையாடி வருகிறார். அவரும் அதிக ரன்கள் அங்கு களமிறங்கி சேர்த்திருக்கிறார். அப்படி இருக்கும்போது துருவ் ஜூரல், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

அவர் எனக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய புஜாரா, புல் சாட் என்பது துருவ் ஜூரல்லின் பலமாக இருக்கலாம். ஆனால் எந்த பவுலருக்கு எதிராக எந்த ஷாட்டை நாம் விளையாட போகிறோம் என்பதை தெரிந்து கொண்டு விளையாட வேண்டும். அப்போதுதான் அது உண்மையான பலமாக மாறும். முதல் டெஸ்டில் கூட ஆடுகளம் சரி இல்லை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த போட்டியில் ஆப் ஸ்டம்ப்க்கு வெளியே சென்ற பந்தை லெஃப்ட் சைடுக்கு அடிப்பது என்பதெல்லாம் தேவையற்றது. அது மோசமான ஷாட் தேர்வு என்று புஜாரா சாடி இருக்கிறார்.

Story first published: Monday, November 24, 2025, 23:58 [IST]
Other articles published on Nov 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+