Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பித்தவறி கூட அதை பண்ணிறாதீங்க.. வீரர்களுக்கு வார்னிங் தந்த டாக்டர்.. புது சிக்கலில் இந்திய அணி!

தரம்சாலா : இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் துவங்க உள்ள நிலையில், இந்திய அணிக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார் அணியின் மருத்துவர்.

Recommended Video

இந்திய அணிக்கு புது சிக்கல்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி இந்திய அணி மருத்துவர் கூறிய ஒரு விஷயம் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

இந்திய வீரர்கள் பந்தை எச்சில் வைத்து தேய்ப்பதற்கு தான் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார் அந்த மருத்துவர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் வியாழன் முதல் துவங்க உள்ளது. இரண்டு அணிகளும் கடந்த சில மாதங்களில் வெற்றி, தோல்விகளை மாறி, மாறி சந்தித்து வந்துள்ளன.

இந்திய அணி நிலை

இந்திய அணி நிலை

இந்திய அணி கடைசியாக ஆடிய நியூசிலாந்து தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. ஒருநாள் தொடரை 0 - 3 என இழந்தது இந்திய அணி. தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் 0 - 2 என இழந்து கடும் விமர்சனத்தை சந்தித்தது.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம்

நிரூபிக்க வேண்டிய கட்டாயம்

இந்திய அணியில் கேப்டன் கோலி முதல் பல பேட்ஸ்மேன்களும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே போல, பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் தங்கள் பழைய ஆட்டத்தை ஆடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

கொரோனா பீதி

கொரோனா பீதி

இந்திய அணியின் தயார் நிலை ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டுத் தொடர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டுக்கு இதுவரை பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

போட்டி நடக்குமா?

போட்டி நடக்குமா?

ஆனால், கொரோனா வைரஸ் பீதியால் இந்த கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ரசிகர்கள் மிக குறைந்த அளவிலேயே மைதானத்துக்கு வருவார்கள்.

மருத்துவர் முன்னெச்சரிக்கை

மருத்துவர் முன்னெச்சரிக்கை

இந்த மோசமான சூழலில் இந்திய வீரர்களுக்கு அணி மருத்துவர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கூறி உள்ளார். சுகாதாரமாக இருப்பது, கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது, ரசிகர்கள் அருகே செல்லாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை அவற்றில் சில.

எச்சில் கட்டுப்பாடு

எச்சில் கட்டுப்பாடு

இது மட்டுமின்றி கிரிக்கெட்டில் நிலவி வரும் ஒரு மோசமான பழக்கத்தையும் செய்யக் கூடாது என கூறி இருக்கிறார் இந்திய அணி மருத்துவர். பந்தை ஸ்விங் செய்ய தயார் செய்ய வேண்டி, எச்சில் துப்பி துடைப்பது கிரிக்கெட்டில் நிலவி வரும் ஒரு பழக்கம்.

பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்

பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்

அப்படி பந்தின் மீது எச்சில் துப்பக் கூடாது என மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கை மட்டும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. பந்தை தேய்த்து வைத்துக் கொண்டால் மட்டுமே வேகப் பந்துவீச்சு எடுபடும்.

எப்படி சமாளிப்பது?

எப்படி சமாளிப்பது?

இல்லாவிட்டால், எதிரணி வீரர்கள் எளிதாக அடித்து ஆடி ரன் குவிப்பார்கள். ஏற்கனவே, இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து மண்ணில் சில போட்டிகளில் தடுமாறியதால். இந்திய மண்ணிலும் தடுமாறினால் கடும் விமர்சனத்தை சந்திக்க நேரிடும். எனவே, என்ன செய்வது என சிந்தித்து வருகின்றனர் இந்திய வீரர்கள்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வியாழன் அன்று தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்களில் இதுவரை பாதி கூட விற்பனை ஆகவில்லை என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, March 11, 2020, 17:38 [IST]
Other articles published on Mar 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+