Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு எங்கய்யா போனாரு? தப்பு தப்பா யோசித்த கேப்டன்.. முடியை பிய்த்துக் கொண்டு கதறிய முன்னாள் வீரர்!

Recommended Video

India vs South Africa 2ns test | தப்பு தப்பா யோசித்த கேப்டன் டு ப்ளேசிஸ்-வீடியோ

புனே : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் எடுத்த சில முடிவுகளை கண்டு முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் நேரலையில் கதறினார்.

முதல் நாள் ஆட்டத்துக்குப் பின் நடந்த விவாதத்தில் பேசிய அவர், நாம் அனைவரும் ரபாடா அதிகமாக பவுலிங் செய்யவில்லை என முடியை பிய்த்துக் கொண்டு இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

விவிஎஸ் லக்ஷ்மனும் இதே போன்ற கருத்தை கூறி, பாப் டு ப்ளேசிஸ்-ஐ விமர்சித்துள்ளார்.

இரண்டாம் டெஸ்ட் துவக்கம்

இரண்டாம் டெஸ்ட் துவக்கம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 273 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து இருந்தது.

ரபாடா அசத்தல் விக்கெட்கள்

ரபாடா அசத்தல் விக்கெட்கள்

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ரபாடா அசத்தலாக செயல்பட்டார். ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்த்தி அசத்தினார்.

அகர்வால் - புஜாரா ஜோடி

அகர்வால் - புஜாரா ஜோடி

அடுத்து ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால், புஜாரா போட்டியை இந்தியா பக்கம் கொண்டு சென்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ரன் குவித்து வந்தனர். அப்போது புஜாரா 58 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடாவிடம் வீழ்ந்தார்.

எங்கே ரபாடா?

எங்கே ரபாடா?

அடுத்து இடைவேளை வந்தது. கோலி - மயங்க் அகர்வால் பேட்டிங் செய்து வந்தனர். இருவரும் கூட்டணியை வலுப்படுத்தாத நிலையில் இடைவேளைக்குப் பின் ரபாடா பந்து வீசினால் விக்கெட் விழ வாய்ப்பு இருந்தது. ஆனால், அவருக்கு கேப்டன் டு ப்ளேசிஸ் ஓவர் தரவில்லை. .

மீண்டும் விக்கெட்

மீண்டும் விக்கெட்

அடுத்த இடைவேளைக்கு சில ஓவர்கள் இருக்கும் போது தான் ரபாடா பந்து வீசினார். அப்போது அவர் வீசிய முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து

விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து

இது குறித்து போட்டிக்குப் பின் பேசிய விவிஎஸ் லக்ஷ்மன், முக்கிய பவுலர் முதல் பாதியில் நன்றாக விக்கெட் எடுத்தார் எனும் நிலையில், இடைவேளைக்குப் பின் அவரிடம் பந்தை கொடுத்து இருக்க வேண்டும் என்றார்.

மிகப் பெரிய தவறு

மிகப் பெரிய தவறு

மேலும், ரபாடா 18 ஓவர்கள் வீசினார். அந்த 18 ஓவர்களும் பேட்ஸ்மேன்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் முன்னரே அவர் வீசி இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையிலும் அவர் புஜாரா, மயங்க் விக்கெட்டை வீழ்த்தினார். இது டு ப்ளேசிஸ் செய்த மிகப் பெரிய தவறு என்றார் லக்ஷ்மன்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

போட்டி நடந்து கொண்டு இருந்த போதே முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ரபாடாவுக்கு சரியாக ஓவர் கொடுக்கவில்லை என புலம்பி வந்தார். முதல் ஆட்டத்துக்குப் பின் அவர் பேசுகையில், தென்னாப்பிரிக்கா இன்று எதிர்மறையாக செயல்பட்டது.

கிரேம் ஸ்மித் புலம்பல்

கிரேம் ஸ்மித் புலம்பல்

நல்ல பார்மில் இருக்கும் ரபாடா தேவையான அளவு பந்து வீசவில்லை என்பதை நினைத்து நாம் இங்கே முடியை பிய்த்துக் கொண்டு இருக்கிறோம்என்று புலம்பினார் ஸ்மித்.

என்ன சொன்னார் ஸ்மித்?

என்ன சொன்னார் ஸ்மித்?

மேலும், பிலாண்டர், மகாராஜ் போன்ற பந்துவீச்சாளர்களை வைத்து ரன்னை கட்டுப்படுத்தினாலும், மறு முனையில் இருந்து தாக்குதல் நடத்த வேண்டும். ரபாடா பந்து வீசி இருக்க வேண்டும். நீங்கள் டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்கள் எடுக்க வேண்டும்" என்றார்.

Story first published: Friday, October 11, 2019, 11:04 [IST]
Other articles published on Oct 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+