Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஒரு தோல்வியால் ஏன் பதற்றம்.. ரசிகர்கள் அமைதியா இருக்கனும்.. ஆர்சிபி வீரர் பேச்சு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதற்கு ரசிகர்கள் யாரும் பதற்றப்படாமல் அமைதி காக்க வேண்டும் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்திய அணி சுழற் பந்துவீழ்ச்சிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரித்தது இது முதல் முறை கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை.

Bhuvneshwar Kumar

ஏனென்றால் அப்போது இந்தியா வெற்றி பெற்றது என்று சுட்டிக்காட்டி அவர், வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாம் ஏதோ இதற்கு முன்பு தோற்றதே கிடையாது என்பது போலவும் இல்லை, இப்போதுதான் முதல் முறை தோற்று இருக்கிறோம் என்பது போலவும் அனைவரும் பேசுகிறார்கள்.

இந்தத் தோல்வி எனக்கு ஒன்றும் பெரிய கவலையை தரவில்லை. ஆடுகளம் தயாரிக்கப்பட்ட விதத்திற்கு ஏற்ற வகையில் நாம் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். ஆடுகளமும் அதற்கு நன்றாக உதவியது. போட்டி நன்றாக தான் சென்றது.

நான்கு ஸ்பின்னர்களை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. சிறப்பாக கேப்டன்ஷி பதவியை செய்து வருகிறார். அணி நிர்வாகக் குழுவில் அவர்தான் முக்கியமுடிவை எடுக்கின்றார். எனவே இந்த விஷயத்தில் அவர்தான் தனது கருத்தை சொல்ல வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வேண்டும் என்று நினைத்தால், அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் தொடர்ந்து அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தழுவி இருப்பதால் ரசிகர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் அமைதியாக இருங்கள் என்றும் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 18, 2025, 23:34 [IST]
Other articles published on Nov 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+