For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்களும் பார்த்துகிட்டே இருக்கோம்.. கிரிக்கெட் ஒன்னும் சரியில்லை! இனிமே ஃபுட்பால் பார்க்கப் போறோம்!

Recommended Video

IND vs SA : Fans trolling rain affected India - South Africa first T20 match

மும்பை : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதனால், இந்திய ரசிகர்கள் பெரும் அளவில் ஏமாற்றத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்திய அணி ஆடும் கிரிக்கெட் தொடர்களில் மழை பெய்து போட்டிகள் தடைபடுவதால் வெறுப்பில் இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் அது குறித்து சிலர் திட்டியும், கேலி செய்தும் பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

முதல் டி20 ரத்து

முதல் டி20 ரத்து

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டி20 போட்டிக்கு முந்தைய இரு நாட்களும் மைதானத்தில் மழை பெய்து வந்தது. போட்டி அன்றும் மழை பெய்ததை அடுத்து போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது.

ரசிகர்கள் பதிவு

ரசிகர்கள் பதிவு

போட்டியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆஷஸ் திட்டம் டெஸ்ட் தொடரின் கடைசி நாள் என்பதால் அந்தப் பக்கம் தாவியவர்களும் உண்டு. சில ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல் செய்தனர்.

கால்பந்து சூப்பர்

கிரிக்கெட் போட்டிகள் தான் மழை வந்தால் கைவிடப்படுகின்றன. ஆனால், கால்பந்து போட்டிகள் மழை பெய்தாலும், பனி கொட்டினாலும், புயலே அடித்தாலும் நிற்காமல் நடப்பதை சுட்டிக் காட்டி கால்பந்து ரசிகராக இருப்பது நிம்மதி என கூறி கிரிக்கெட் ரசிகர்களை கால்பந்து பக்கம் ஈர்க்கப் பார்க்கிறார்.

மிதந்து வரும் வீரர்கள்

சில நாட்கள் முன்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இடையே கடலில் பயணம் போன இந்திய வீரர்களின் புகைப்படத்தை பகிர்ந்து, இந்திய வீரர்கள் தற்போது மைதானத்தில் இப்படி தான் இருக்கிறார்கள் என கிண்டல் செய்துள்ளார்.

என்னங்க இது?

இது மீம்ஸ் அல்லது கேலி செய்யும் காட்சி இல்லை. உண்மையான காட்சி. போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானத்துக்கு ரசிகர்கள் இப்படி தான் வந்து கொண்டு இருக்கிறார்கள். சேறும், சகதியும் நடக்கவே முடியாத அளவு தேங்கி உள்ளது. அப்படி மைதானம் சென்றும் அவர்களால், போட்டியை பார்க்க முடியவில்லை.

திட்டம் சரியில்லை

சாம்பியன்ஸ் ட்ராபி முதல் உலகக்கோப்பை வரை ஐசிசி தொடர்களின் போதும் மழையால் போட்டிகள் தடைபட்டது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரும் மழையால் தடைபட்டுள்ளது. சரியான திட்டமிடல் இல்லாதது தான் காரணம் என பொங்கி இருக்கிறார் இந்த ரசிகர்.

கால்பந்து பார்ப்போம்

கால்பந்து பார்ப்போம்

இதையெல்லாம் பார்க்கும் போது அந்த கால்பந்து ரசிகர் சொன்னது போல பேசாமல், கிரிக்கெட்டை மூட்டை கட்டிப் போட்டு விட்டு, கால்பந்து ரசிகராக மாறினால் என்ன என்று தோன்றுகிறது? அதிலும் கால்பந்து போட்டி இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும்

Story first published: Monday, September 16, 2019, 12:18 [IST]
Other articles published on Sep 16, 2019
English summary
IND vs SA : Fans trolling rain affected India - South Africa first T20 match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+