Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே ஆகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்.. வாசிம் அக்ரமை விட இவர் தான் பெஸ்ட் - மைக்கேல் வான்

பிரிட்ஜ்டவுன்: வெள்ளைப் பந்தில் விளையாடப்படும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் உலகிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா தான் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியிருக்கிறார். வாசிம் அக்ரம் உள்ளிட்ட மற்ற சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் விட பும்ரா தான் உலகிலேயே மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என கூறி புகழ்ந்து இருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறி இருக்கிறார்.

2024 டி20 உலகக் கோப்பையில் பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அவர் 15 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்திய போதும் மிகக் குறைவாக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு மிக அருகே சென்ற போது, அவர் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியின் போக்கை மாற்றி அமைத்தது.

T20 World Cup IND vs SA india 20 2024


இந்த நிலையில் மைக்கேல் வான் அது குறித்து அவரை பாராட்டி பேசி இருக்கிறார். "இந்தப் போட்டியில் ரீசா ஹென்ரிக்ஸ் விக்கெட்டை பவுல்ட் அவுட் செய்து பும்ரா வீழ்த்தியது மிக அற்புதமானது. அவர் பந்தை வேறு ஒரு கோணத்தில் வீசினார். அது லெக் ஸ்டம்பை நோக்கி சென்றது. ஆனால், கடைசி நிமிடத்தில் அது அப்படியே வெளியே சென்று ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது. அடுத்து ஜான்சன் விக்கெட்டை வீழ்த்திய போதும் அதேபோல வேறு ஒரு கோணத்தில் சென்று பவுல்ட் அவுட் செய்தார்."

"ஆனால், அது மட்டுமல்ல. மற்ற பந்துகளில் பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளை அடிக்க முயற்சி செய்தார்கள். அதற்காக அவர்கள் பந்து எங்கே வருகிறதோ, அதன் பின்னே சென்றார்கள். அதன் காரணமாக பந்துக்கும், அவர்களது பேட்டுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லை. இந்த நிலையிலும் பும்ரா சிறிய இடைவெளியை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப பந்தை வைடாக வீசி, ஸ்லோ பந்துகளை வீசி அந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விளையாடியவர்களிலேயே இவர்தான் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என உண்மையாகவே நான் நினைக்கிறேன்." என்றார் மைக்கேல் வான்.

மேலும், "இவரை விட சிறந்த வேகப் பந்துவீச்சாளரை உங்களால் சொல்ல முடியுமா? எனக்குத் தெரிந்து வாசிம் அக்ரம் சிறப்பானவர். இன்னும் பலரையும் நாம் கூறலாம். ஆனால், பும்ராவின் அற்புதமான பந்து வீசும் திறமை மற்றும் அவரது வேகம், அவரது விதவிதமான பந்துகள், அதை அவர் கடும் அழுத்தத்திற்கு இடையே ஒவ்வொரு நாளும் செய்வது அவரை தனித்துவமாக காட்டுகிறது. அவர் இந்த உலகக் கோப்பையில் ஒன்று, இரண்டு முறை மட்டும் இதை செய்யவில்லை. அவர் ஒவ்வொரு போட்டியிலும் இதை செய்தார்" என மைக்கேல் வான் பும்ராவை புகழ்ந்தார்.

Story first published: Monday, July 1, 2024, 21:22 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+