Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை- ஒரே போட்டியில் ஒட்டுமொத்த சாதனைகளையும் உடைத்த கோலி

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு விராட் கோலி முக்கிய காரணமாக இறுதி போட்டியில் இருந்தார். இந்த தொடரில் விராட் கோலி 7 போட்டிகளில் அடித்த ரன்களை விட இறுதிப் போட்டியில் மட்டும் கூடுதலாக அடித்து விட்டார்.

ஆம் இறுதிப்போட்டியில் சேர்க்காமல் ஏழு ஆட்டங்களில் விராட் கோலி 75 ரன்கள் சேர்க்க, விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறார். இதனால் தான் விராட் கோலியை தொடக்க வீரர் என்ற இடத்தில் இருந்து நீக்க வேண்டும் விராட் கோலிக்கு அணியில் இடம் கொடுக்கக் கூடாது என்று பல விமர்சனங்கள் வந்த நிலையிலும் ரோஹித், ராகுல், கோலி மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

t20 world cup ind vs sa virat kohli

இந்த நிலையில் டி20 கிரிக்கெட் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதன்படி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். இதுவரை 125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றெடுக்க இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் சூரிய குமார் இருக்கிறார்.

சூரியகுமார் 68 போட்டிகளில் விளையாடி 15 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.இதேபோன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 159 சர்வதேச t20 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார். ஜிம்பாப்பே வீரர் சிக்கந்தர் ராசா 86 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 129 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதேபோன்று டி20 உலக கோப்பையில் இரண்டு முறை தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் என்று சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். இம்முறை மட்டும் லீக் சுற்றி விராட் கோலி 3 அரை சதங்கள் அடித்து இருந்தால் அந்த விருதும் விராட் கோலிக்கு தான் கிடைத்திருக்கும். இதே போன்று, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இரண்டு முறை டி20 உலக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.

Story first published: Sunday, June 30, 2024, 6:03 [IST]
Other articles published on Jun 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+