Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ! இவரா? இந்தியாவை தோற்கடிக்கவே ஐசிசி அனுப்பிய ஆளாச்சே.. அதிர்ஷ்டமே இல்லாத நடுவர்

மும்பை : டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டத்தில் எந்த நடுவர் பணியாற்றப் போகிறார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் சில நடுவர்கள் களத்திலோ இல்லை மூன்றாம் நடுவராகவோ இருந்தாலோ அது நிச்சயம் இந்தியாவுக்கு நல்ல சகுனமே கிடையாது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

90ஸ் கிட்ஸ்களுக்கு ஸ்டீவ் பக்னர் என்ற நடுவரை பார்த்தாலே பிடிக்காது. அவர் இருந்தாலே இந்தியா தோற்றுவிடும் என்று சொல்வார்கள். தற்போது அதேபோல் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ என்ற நடுவர் இந்தியாவுக்கு கொஞ்சமே அதிர்ஷ்டம் தராத நடுவர் என்ற பெயரைப் பெற்று இருக்கிறார்.

t20 world cup ind vs sa Richard Kettleborough

ஐசிசி தொடர்களில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ எப்போதெல்லாம் இந்தியாவின் முக்கிய போட்டிகளில் இருந்திருக்கிறாரோ, அப்போதெல்லாம் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ நடுவராக இருந்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதேபோன்று 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ களத்தில் நிற்க இந்தியா, ஆஸ்திரேலியா விடம் தோற்றது. இதேபோன்று 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்திலும் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ களத்தில் செயல்பட இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடம் தோற்றது. 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ களத்தில் நின்றார்.

இதனால் இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது. இதேபோன்று 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ களத்தில் நிற்க இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ களத்தில் தான் நின்றால் இந்தியா தோற்கிறது என மூன்றாம் நடுவராக அனுப்புவோம் என்று ஐசிசி நினைத்தது.அப்போதும் அது இந்தியாவுக்கு கெட்ட சகுனத்தை தாம் கொடுத்திருக்கிறது.

2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ டிவி நடுவராக இருக்க அதில் இந்தியா தோற்றது. மீண்டும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ டிவி நடுவராக இருக்க, அதிலும் இந்தியா தோற்றுது. மீண்டும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் ஃபைனலில் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ நடுவராக இருக்க அதிலும் இந்தியா ஆஸ்திரேலியாவிலும் தோற்றது. இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணிக்கு கெட்டல்ப்ரோ, டி20 ஃபைனலிலும் நடுவராக இறுதிப்போட்டியில் செயல்பட போகிறார். இதனால் இந்திய ரசிகர்கள் இப்போதே கலக்கத்தில் உள்ளனர்.

Story first published: Friday, June 28, 2024, 22:57 [IST]
Other articles published on Jun 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+