For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: கைவிரலை உயர்த்தி பேசிய கம்பீர்.. பேச்சை குறை, செயலில் காட்டு என்று சொன்ன கும்ப்ளே

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் பின்தங்கி இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி பேட்டிங்கில் படு மோசமாக விளையாடியதால் தற்போது மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Ind vs SA

இதனால் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவ அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கும் போது இந்திய அணி வீரர்களை அழைத்து கம்பீர் மைதானத்தில் கோபமாக பேசினார். அப்போது துருவ் ஜூரலை பார்த்து கைவிரலை உயர்த்தி அவர் பேசிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என கம்பீர் கூறியதாக தெரிகிறது. அப்போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அணில் கும்ப்ளே, கௌதம் கம்பிற்கு அறிவுரை வழங்கினார் அதில் முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்ளுங்கள். கிரிக்கெட் உலகின் சிறந்த அணியை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கும்.

அணியை எதிர்கொள்ளும் போது நாம் அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.இது போன்ற சூழலில் உங்களுடைய கேரக்டரை வெளிப்படுத்தி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால் கடுமையாக போராட்ட குணத்தை காட்டுங்கள்.

அப்போது தோற்காமல் போட்டி டிராவாவது செய்ய முடியும். கம்பீர் பேசுவதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.ஆனால் அந்த பேச்சுக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட வேண்டும் என்று அணில் கும்ப்ளே கூறியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணி 500 ரன்களை இலக்காக நிர்ணயித்து இந்தியாவை பேட்டிங் செய்ய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 25, 2025, 11:20 [IST]
Other articles published on Nov 25, 2025
English summary
Ind vs SA- Gambhir Animated chat with Players as Kumble gives advice to Head coach
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+