ஒரு ஸ்பின்னர் போதும்.. யாருனு நீங்களே முடிவு செய்யுங்க.. இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்த கம்பீர்!
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதால், இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தோல்விக்கு பின், நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒரு மாத ஓய்வுக்கு பின் களம் திரும்புகின்றனர்.

அதேபோல் நட்சத்திர வீரர்களின் கவனம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பக்கம் திரும்பியுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதாக வரலாறு இல்லை. இதனால் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு மருந்தாக புதிய வரலாற்று வெற்றியை படைக்க இந்திய அணி வீரர்கள் மும்முரமாக உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தான் செயல்பட உள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இதனிடையே தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க வேண்டும். 3வது வீரராக சுப்மன் கில், 4வது இடத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்க வேண்டும்.
5வது இடத்தில் விக்கெட் கீப்பராக உள்ள கேஎல் ராகுல், அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் இருக்க வேண்டும். இதன்பின் அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோர் இடம்பெற வேண்டும். இந்த 2 ஸ்பின்னர்களில் ஒருவரை மட்டுமே இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்கா மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் தான் விளையாட வேண்டும்.
அதன்பின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முகமது ஷமிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் முகமது ஷமியின் பவுலிங் ஆக்ஷனை போலவே சீம் பகுதியை பிடித்து ஸ்விங் செய்ய கூடிய முகேஷ் குமாருக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
Story first published: Monday, December 25, 2023, 21:12 [IST]
Other articles published on Dec 25, 2023


Click it and Unblock the Notifications