Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: கம்பீரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமா? கங்குலி ஒபன் டாக்..பேட்டிங் வரிசை குறித்து அறிவுரை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர வந்த பிறகு டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை இந்தியா தழுவி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் தொடரை இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெற்று இருக்கிறது. வெறும் 124 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாத நிலையில், இந்தியாவின் பேட்டிங் இருக்கிறது.

Sourav Ganguly

இதற்கு கம்பீர் செய்யும் முட்டாள்தனம் தான் காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரித்து இந்திய பேட்ஸ்மன்களுக்கு கம்பீர் நெருக்கடி தருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் பலரும் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலி, கம்பீரை பதவி நீக்கும் முடிவுக்கு தற்போது வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து வீரர்கள், பயிற்சி குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படும் வேண்டும்.

இதில் கேள்வியே கிடையாது. ஆனால் அதே சமயம் கம்பீரும் பதவியை விட்டு நீக்க கூடாது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் ஆடுகளம் எவ்வாறு மாறுகிறது என்பதை நாம் அனைவருமே பார்த்திருக்கின்றோம்.

எனவே டெஸ்ட் போட்டிக்கு பொருத்தவரை பொறுமை என்பது மிகவும் முக்கியம். அது மட்டுமில்லாமல் எந்த மாதிரி ஆடுகளம் இருந்தாலும் இந்திய அணியின் பவுலர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். அதனை நாம் லண்டன் ஓவல் மைதானத்திலே பார்த்து விட்டோம். இங்கிலாந்து ஆடுகளங்களில் கம்பீர் பயிற்சியாளராகவும், கில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

அதேபோல் இந்திய ஆடுகளங்களிலும் இருவரர்களால் சிறப்பான செயல்பட முடியும். பேட்டிங் வரிசையை அவர்கள் சரி செய்ய வேண்டும். வாஷிங்டன் சுந்தர் திறமையான கிரிக்கெட் வீரர் தான். அதற்காக அவருக்கு மூன்றாவது வரிசையில் களமிறங்க சொல்வது என்பது எதிர்காலத்திற்கான முடிவாக இருக்காது.

அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. மொத்தமாகவே சுழற் பந்துவீச்சாளர்கள் 25 முதல் 30 ஓவர்கள் வீச வேண்டிய நிலை வரும். அதற்கு நான்கு ஸ்பின்னர்கள் தேவையில்லை. உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன்கள் தான் பேட்டிங் வரிசையில்

Story first published: Thursday, November 20, 2025, 11:51 [IST]
Other articles published on Nov 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+