Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: உலக கிரிக்கெட்டில் வேறு யாருமில்லை.. டி20யில் ஹர்திக் பாண்டியா புதிய சாதனை

தர்மசலா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்ஷித் ராணா, ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் அபாரமாக பந்து வீசிய நிலையில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

Hardik

இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சை தொடங்கினார். தனது முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா 100வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஆர்ஸ்தீப் சிங் பும்ராவுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அது மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட்டிலேயே பேட்டிங்கில் ஆயிரம் ரன்கள், பந்துவீச்சில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஆல்ரவுண்டர் என்ற பெருமையும் ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைத்திருக்கிறது. தற்போது ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 1939 ரன்கள் அடித்திருக்கிறார். இன்னும் 61 ரன்கள் அடித்தால் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையும் ஹர்திக் பாண்டியாவுக்கு சேரும்.

அந்த சாதனையை தற்போது தென்னாப்பிரிக்கா தொடரிலேயே அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா இந்த சாதனையை நிகழ்த்திய பிறகு களத்தில் இருந்த முன்னணி வீரர்கள் அவருக்கு கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 32 வயதான ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பேட்டிங்கில் 1904 ரன்களும், பந்து வீச்சில் 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எட்ட அவருக்கு இன்னும் 9 விக்கெட் தேவை.

Story first published: Sunday, December 14, 2025, 20:27 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+