Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: மாபெரும் இரட்டை சாதனையை எதிர்நோக்கி ஹர்திக் பாண்டியா.. தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தயாராகி வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா சர்வதேச டி20 மைல்கல்லை நெருங்குகிறார். டிசம்பர் 9 அன்று தொடங்கவிருக்கும் இத்தொடரில், அவர் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் என்ற அரிய இரட்டைச் சாதனையை படைக்கவுள்ளார்.

2000 ரன்கள் எட்ட 140 ரன்களும், 100 விக்கெட்கள் வீழ்த்த 2 விக்கெட்களும் ஹர்திக் பாண்டியாவுக்குத் தேவைப்படுகிறது. 32 வயதான ஹர்திக் பாண்டியா 120 டி20 போட்டிகளில் 1,860 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 27.35, ஸ்ட்ரைக் ரேட் 141.01 ஆகும்.
இதுவரை 5 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

Hardik Pandya

பந்துவீச்சில் ஹர்திக் 98 விக்கெட்களுடன் சராசரி 26.58 வைத்துள்ளார். அவர் இந்தியாவின் மூன்றாவது அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர். 100 விக்கெட் சாதனையைப் புரியும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.

கால்தசை காயத்தால் 2025 ஆசியக் கோப்பைத் தொடர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் போன்றவற்றை பாண்டியா பங்கேற்கவில்லை. இதனால் 2 மாதத்திற்கு பின் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். அண்மையில் சையது முஷ்டாக் அலி டிராபியில் பரோடா அணிக்காக 42 பந்துகளில் 77 ரன்கள் குவித்து தனது உடற்தகுதியை நிரூபித்தார்.

அவரது வருகை, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவுக்குப் பெரும் ஊக்கத்தை தரும்.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடர் டிசம்பர் 9 அன்று கட்டாக்கில் தொடங்கி, டிசம்பர் 11 அன்று முல்லான்பூரிலும், டிசம்பர் 14 அன்று தரம்சாலாவிலும், டிசம்பர் 17 அன்று லக்னோவிலும், டிசம்பர் 19 அன்று அகமதாபாத்திலும் போட்டிகள் நடைபெறும்.

தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா , சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

Story first published: Monday, December 8, 2025, 20:59 [IST]
Other articles published on Dec 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+