Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: டிரஸிங் ரூம்மில் என்ன நடக்கிறது.. உண்மையை உளறிய ஹர்சித் ராணா.. விமர்சனத்துக்கும் பதிலடி

மும்பை: தம் மீது எழும் விமர்சனங்கள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஹர்சித் ராணா சிறப்பாகச் செயல்பட்டார். குவின்டன் டி காக் மற்றும் ரியான் ரிக்கெல்டனை ஒரே ஓவரில் அவுட்டாக்கி, 10 ஓவர்களில் 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

Harshit Rana

ஹர்சித் ரானாவுக்கு கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வாய்ப்பு தருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்சித் ராணா, "இதையெல்லாம் கேட்டு, மனதில் அழுத்தத்துடன் களத்திற்குச் சென்றால், என்னால் விளையாட முடியாது. அதனால், முடிந்தவரை தவிர்க்கிறேன்."

"மைதானத்தில் நான் என்ன செய்ய வேண்டுமோ, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வெளியில் என்ன நடக்கிறது அல்லது என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்குக் கவலையில்லை. மைதானத்தில் நான் என்ன செய்ய வேண்டுமோ, என் கடின உழைப்பிலும், நான் களத்தில் செய்யப் போவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்."

"முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் எனது திட்டத்தை மாற்ற மாட்டேன். அதே திட்டத்தில் கவனம் செலுத்தி, முதல் போட்டியில் நன்றாகச் செய்த விஷயங்களை மீண்டும் செய்ய முயற்சிப்பேன்" என்று ஹர்சித் ராணா கூறினார்.டிரஸிங் ரூம்மில் கம்பீர் மற்றும் கோலி இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதில் அளித்த ஹர்சித் ராணா, "இது ஒரு மகிழ்ச்சியான டிரஸிங் ரூம். ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் இருப்பதால் அருமையான சூழல் நிலவுகிறது. அவர்கள் எப்போதும் இளம் வீரர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். எப்படி பந்துவீச வேண்டும் போன்ற யுத்திகளை வகுக்க அவர்கள் உதவுகிறார்கள். அனுபவமிக்க வீரர்கள் வழிகாட்ட இருக்கும்போது அது எப்போதும் ஒரு சிறந்த சூழலையே உருவாக்கும் என்றும் ராணா விளக்கினார்.

Story first published: Wednesday, December 3, 2025, 12:39 [IST]
Other articles published on Dec 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+