Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடப்போயா..” ஒட்டுமொத்த நம்பிக்கையை உடைத்த புஜாரா.. அதிருப்தியில் டிராவிட் செய்த விஷயம் - வீடியோ

செஞ்சூரியன்: ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்த புஜாராவிடம், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நடந்துக்கொண்ட விதம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோரின் கிரிக்கெட் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கடைசி போட்டி இதுவே ஆகும்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் பிசிசிஐ-யிடம் இருந்து அவசர கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் நன்றாக ஆடியே தீர வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் நன்றாக விளையாடக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோரை வெளியேற்றிவிட்டு, இவர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனையடுத்து ரகானே ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி தப்பித்துவிட்ட நிலையில் சட்டீஸ்வர் புஜாரா மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.

சோகமான சாதனை

சோகமான சாதனை

ஓப்பனர்கள் 117 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்கினார். அப்போது, தான் எதிர்கொண்ட முதல் பந்திலே அழகாக ஷாட் லேக்கில் நின்றவரிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில் , முதல் விக்கெட்டிற்கு களமிறங்கி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையை புஜாரா படைத்தார்.

Recommended Video

IND vs SA Pujara இனி ஆட்டத்தை மாற்ற வேண்டும் ! கடைசி வாய்ப்பு - Pravin Amre | Oneindia Tamil
புஜாரா மீதான நம்பிக்கை

புஜாரா மீதான நம்பிக்கை

சட்டீஸ்வர் புஜாராவை அணியில் இருந்து நீக்கும் முடிவில் பிசிசிஐ இருந்துள்ளது. ஆனால் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சண்டைப்போட்டு அவரை தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச்சென்றார். மேலும் முதல் டெஸ்டிலேயே அவருக்கு ப்ளேயிங் 11லும் வாய்ப்பு கொடுத்தார். இப்படி அதீத நம்பிக்கை வைத்தவர், புஜாரா டக் அவுட் ஆனவுடன் என்ன செய்தார் தெரியுமா?

டிராவிட்டின் பதில்

டிராவிட்டின் பதில்

அவுட்டான பிறகு நேரடியாக ஓய்வறைக்கு சென்ற புஜாரா உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு எதிரே சென்ற ராகுல் டிராவிட் எதையும் அவரிடம் அதிகம் பேச விரும்பவில்லை. அதிருப்தியில் இருந்தவாறு, தோழில் தட்டிக்கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். அதன் பின்னர் புஜாராவும் வருத்தமாக நின்றுக்கொண்டிருந்த காட்சிகளும் வீடியோவாக பதிவாகியுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Monday, December 27, 2021, 12:29 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+