Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. கில் காயத்தால் பின்னடைவு.. கேப்டனாக மாறிய பண்ட்

கொல்கத்தா: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை விட வெறும் 30 ரன்கள் தான் இந்தியா முன்னிலை பெற்று இருந்தது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி வெறும் 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை இழந்தார். இந்த தருணத்தில் 37 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது.

IND vs SA

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாவது வீரராக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 82 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 29 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார். இந்த தருணத்தில் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் நான்கு ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு கழுத்துப் பகுதியில் சுளுக்கு ஏற்பட்டது.

இதனால் வலியால் துடித்த கில் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார். இதனை அடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்திற்கு வந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தலா 27 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரல் அதிரடி காட்ட முயற்சி செய்தார்.

மூன்று பவுண்டரிகளை அடித்த ஜூரல் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். அக்சர் பட்டேல் 16 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. கில் மீண்டும் பேட்டிங் செய்ய வரவில்லை. இதனை அடுத்து 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

கில் ஃபில்டிங் செய்ய வரவில்லை என்பதால் கேப்டனாக பண்ட் செயல்படுகிறார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான பேட்டிங் காரணமாக 200 ரன்களை கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 15, 2025, 14:13 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+