Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஃபாலோ ஆனை தராமல் மீண்டும் தென்னாப்பிரிக்கா பேட்டிங்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட குறைந்த 288 ரன்கள் இந்திய அணி பின்தங்கி இருக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Ind vs Sa

ஆனால் கவுகாத்தி டெஸ்ட் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாகவே நடந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக் அணி 489 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் உடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும், ராகுல் 22 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி 95 ரன்களுக்கு இரண்டு விக்கெட் எடுத்த நிலையில் அதன் பின் விளையாடிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். சாய் சுதர்சன் 15 ரன்களிலும், துருவ் ஜூரல் டக்அவுட் ஆகியும், பண்ட் ஏழு ரன்களிலும், ஜடேஜா ஆறு ரன்களிலும், நிதிஷ்குமார் 10 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 122 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி 27 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி பொறுமையாக விளையாடி பந்துகளை எதிர்கொண்டனர். வாஷிங்டன் சுந்தர் 92 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

இதேபோன்று 134 பந்துகளை எதிர் கொண்ட குல்தீப் 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். உம்ரா 5 ரன்களில் வெளியேற இந்திய அணி 83.5 ஓவரில் 201 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய மார்க்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளையும், சைமன் ஹார்பர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் அடுத்து இந்திய அணி 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி பாலோ ஆனை கொடுக்காமல் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. கடைசியாக பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் தென்னாபிரிக்க அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

Story first published: Monday, November 24, 2025, 15:32 [IST]
Other articles published on Nov 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+