செஞ்சூரியன் : தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளியேறினார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா , திலக் வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அபிஷேக் ஷர்மா 50 ரன்கள் சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா 18 ரன்கள் சேர்க்க மறுமுனையில் அதிரடியை காட்டிய திலக் வர்மா 51 பந்துகளில் சதம் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 107 ரன்கள் எடுத்த திலக் வர்மா ஏழு சிக்ஸர்கள் எட்டு பௌண்டரிகள் அடித்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரியான் ரிகல்டன் 20 ரன்களிலும், ரீசா ஹென்றிக்ஸ் 21 ரன்களிலும் ,ஏய்டன் மார்க்கரம் 29 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாபிரிக்க அணி 10 ஓவர் முடிவில் 84 ரன்கள் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி தோல்வியை நோக்கி சென்ற நிலையில் SRH வீரர் ஹென்ரிச் கிளாசன் 22 பந்துகளில் அவர் 41 ரன்கள் குவிக்க தென்னாப்பிரிக்க அணி சரிவிலிருந்து மீண்டது.
அப்போது கிளாசன் விக்கெட்டை ஆர்ஸ்தீப் வீழ்த்த டேவிட் மில்லர் களத்திற்கு வந்தார். மில்லர் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் பட்டேலின் அபார கேட்ச் ஆல் அவர் ஆட்டம் இழந்தார். இறுதியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மார்க்கோ யான்சன் சிக்சர், சிக்சர் ஆக அடிக்க 17 பந்துகளில் அவர் 54 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றியை நோக்கி சென்ற நிலையில் மார்க்கோ யான்சன் விக்கெட்டை ஆர்ஸ்தீப் கடைசி ஓவரில் வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்தியாவில் வெற்றி உறுதியானது. தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளும் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தற்போது இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி டி20 போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.