Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானின் பிரம்மாண்ட டி20 ரெக்கார்டை உடைத்த இந்திய அணி.. ஒரே ஆண்டில் அதிக வெற்றி சதவிகிதம்

மும்பை: சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் ஆறு ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்து உலகின் முன்னணி டி20 அணி என்பதை ஆணித்தரமாக நிரூபித்து இருக்கிறது. டி20 போட்டிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தான் அணி உலகின் முன்னணி அணியாக வலம் வந்தது.

2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி தான் ஆடிய 19 டி20 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்று இருந்தது. அதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக வெற்றி சதவிகிதத்தை பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்று இருந்தது. 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி தான் ஆடிய போட்டிகளில் 89.43 வெற்றி சதவிகிதத்தை பெற்று இருந்தது. அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்து இருக்கிறது.

ind vs sa india south africa 20

2024 ஆம் ஆண்டு இந்திய அணி 26 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 24 வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதன் மூலம், இந்த ஆண்டு இந்திய அணி 92.31 என்ற வெற்றி சதவிகிதத்தை வைத்துள்ளது. இதுவே ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிக வெற்றி சதவிகிதம் ஆகும்.

சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் ஒரே ஆண்டு உள்ளூர் டி20 அணிகள் பெற்ற அதிக வெற்றி சதவிகிதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. தமிழ்நாடு மாநில அணி 93.75 வெற்றி சதவிகிதத்துடன் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் சர்வதேச அளவில் உள்ளூர் போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இமாலய சாதனையை பதிவு செய்து இருக்கிறது. இதே 2024 ஆம் ஆண்டு தான் இந்திய அணி டி20 உலகக் கோப்பையையும் வென்று இருக்கிறது. அந்த உலகக் கோப்பை வெற்றி தற்செயலாக கிடைத்தது அல்ல என்பதையும், இந்த சாதனையின் மூலம் இந்திய அணி நிரூபித்துக் காட்டி இருக்கிறது.

Story first published: Sunday, November 17, 2024, 12:28 [IST]
Other articles published on Nov 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+