Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 2 ஸ்டார் வீரர்களுக்கு இடமில்லை.. பிளேயிங் XI என்ன? தொடரை வெல்லப்போவது யார்? அபிஷேக் நாயர்

இந்தியா,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி கொல்கத்தாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய அணி நினைத்த மாதிரி ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்று முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

Ind vs sa India vs south africa Shubman gill

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியில் துருவ் ஜூரலுக்கு தற்போது மிரட்டலான பார்மில் இருக்கின்றார். வெஸ்ட் இண்டீஸ் எதிராக சதம் அடித்த அவர் தற்போது தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக களம் இறங்கி போட்டியில் இரண்டு சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் அவர் எந்த இடத்தில் களமிறங்கி ரன்கள் சேர்த்து இருக்கிறாரோ, அதே இடத்தை இந்திய அணியிலும் நான் வழங்குவேன். என்னை கேட்டால் ஜடேஜா பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும். ஏழாவது இடத்தில் விளையாடினால் இது போன்ற ஆடுகளங்களில் சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் அவர் வாழ்க்கையில் மிகச் சிறந்த பார்மில் உள்ளார். எனவே இந்த பேட்டிங் வரிசையுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும் என நினைக்கின்றேன். என்னுடைய அணியில் குல்தீப் யாதவ்க்கு இடம் இருக்காது. இந்த ஆடுகளும் எப்போதுமே பேட்டிங்கிற்கு சவாலாக இருக்கும் என தெரிகிறது.

இதனால் கூடுதலாக ஒரு பேட்டரை பயன்படுத்தி இந்திய அணி நிர்வாகம் விளையாட வேண்டும். இதன் மூலம் அணியின் பேட்டிங்கில் கூடுதல் உறுதி தன்மை கிடைக்கும். ஒரு வேகப்பந்துவீச்சாளரும் கூடுதலாக இருந்தால் அணிக்கு நல்லது என நினைக்கின்றேன். இதன் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டியை நான் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அணியில் சேர்ப்பேன். இதனால் குல்தீப்க்கு அணியில் இடம் இருக்காது. மேலும் நம்பர் மூன்றாவது வீரராக தான் சாய் சுதர்சனை தான் பயன்படுத்துவேன். என்னைக் கேட்டால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிய வாய்ப்பு இருக்கிறது என அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 12, 2025, 12:19 [IST]
Other articles published on Nov 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+