Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு 350 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா.. கோலி, ராகுல் அதிரடி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயித்திருக்கிறது. டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக இழந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க வேண்டும் என்று உத்வேத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் கில், ஸ்ரேயாஸ் ஆகியோர் இடம்பெறாத நிலையில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ் திரும்பினார். ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது.

Ind vs sa

இந்த மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனால் இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலில் இருந்தே அதிரடி காட்டினர். ஆட்டத்தின் முதல் பந்திலே ஜெய்ஸ்வால் பவுண்டரி அடித்து அசத்தினார்.

அதிரடியாக ஆட முற்பட்ட அவர் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை போன்று மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா மூன்று சிக்சர், ஐந்து பவுண்டரி என பறக்க விட்டார் இதன் மூலம் 57 ரன்கள் அவர் அடித்தார். மறுமுனையில் விராட் கோலியின் தன்னுடைய அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

இதற்கிடையே ருதுராஜ் 8 ரன்கள் எடுத்திருந்தபோது பிரவீஸ் இடம் கேட்ச் ஆனார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் பெரிய அளவு நிலைக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், விராட் கோலி 102 பந்துகளில் தன்னுடைய 52 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற நிலைக்கு சென்றது. சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் அடித்தார். ஜடேஜா 20 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

Story first published: Sunday, November 30, 2025, 17:32 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+