IND vs SA: 359 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா.. கோலி, ருதுராஜை தொடர்ந்து ராகுல் வெறியாட்டம்
ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 359 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்திருக்கிறது. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்கள் இலக்காக கொடுத்தும் அதனை 17 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.
இதற்கு காரணம் பனிப்பொழிவு தான் இந்த சூழலில் ராஞ்சியை விட ராய்ப்பூரில் அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அதைவிட இந்திய அணி வரும் 9 ரன்கள் தான் கூடுதலாக குவித்து இருக்கிறது.

இதனால் இந்த இலக்கு வெற்றி இலக்காக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், ரோகித் சர்மா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ருதுராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். ஒரு கட்டத்தில் 77 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் விராட் கோலி தன்னுடைய 53வது சதத்தை எடுத்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டின் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றது.
இறுதியில் கேல் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார் இதில் ஆறு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். ஜடேஜாவும் இறுதியில் 24 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி 24 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்திருந்தது. இதன் மூலம் இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருந்தது.
பந்துவீச்சில் அதிகபட்சமாக மார்க்கோ ஜான்சன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி 18 ரன்கள் சேர்த்தது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ராகுல் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். ராகுல் கடைசி பத்து ஓவரில் 424 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் கிளிக் 142 ஆகும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி அடித்திருக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.


Click it and Unblock the Notifications