Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. முழு வீரர்கள் பட்டியல் இங்கே! ரோஹித் நிலை?

Recommended Video

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு | IND vs SA Test Sqaud

மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

வாய்ப்பு விவாதம்

வாய்ப்பு விவாதம்

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருந்த நிலையில், யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி இருந்தது. குறிப்பாக ,வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு யார், யாருக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகும் என்ற பேச்சும் இருந்தது.

மாயங்க் அகர்வால் தப்புவார்

மாயங்க் அகர்வால் தப்புவார்

துவக்க வீரர்கள் தவிர இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். துவக்க வீரர்கள் மாயங்க் அகர்வால், ராகுல் சரியாக ரன் குவிக்கவில்லை. மாயங்க் அகர்வால் மொத்தத்தில் ரன் குவிக்காவிட்டாலும், ஒரு அரைசதம் அடித்ததால், தன்னை காப்பாற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

ஆனால், ராகுல் கடந்த 30 இன்னிங்க்ஸ்களில் 664 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். மேலும், அவர் ஆட்டமிழக்கும் விதமும் அடிப்படை தவறாக இருந்தது. அதனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா, அணியில் துவக்க வீரராக ஆடுவார் என கூறப்பட்டது.

ராகுல் நீக்கம்

ராகுல் நீக்கம்

அது தற்போது உண்மை ஆகி உள்ளது. தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் இளம் வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ரோஹித் சர்மா துவக்கம்

ரோஹித் சர்மா துவக்கம்

மேலும், ரோஹித் சர்மா தான் துவக்க வீரராக களம் இறங்குவார் என தேர்வுக் குழு தலைவர் கூறினார். அதனால், ரோஹித் சர்மா ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஆடிய மற்ற வீரர்கள், அப்படியே இடம் பெற்றுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி

இந்திய அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விரிதிமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்

Story first published: Thursday, September 12, 2019, 17:46 [IST]
Other articles published on Sep 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+