Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 புதுமுகங்கள்.. சூப்பர் கேப்டன் டி காக்.. இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. என்ன நடந்தது?

Recommended Video

south africa won by 9 wickets| இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு! அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா

பெங்களூரு : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று எதிர்பார்ப்புக்கு மாறாக பேட்டிங் தேர்வு செய்து மொத்தமாக சொதப்பியது.

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டி காக் மற்றும் இரு புதுமுக பந்துவீச்சாளர்கள் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

தொடர் வெல்லும் வாய்ப்பு

தொடர் வெல்லும் வாய்ப்பு

மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.

தொடரை சமன் செய்தது

தொடரை சமன் செய்தது

அதே போல, தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலை இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது அந்த அணி. இந்தியா வெல்ல வேண்டிய தொடரை கோட்டை விட்டது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்தப் போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு மைதானம் சேஸிங் செய்ய ஏற்ற மைதானம் என கூறப்பட்ட நிலையில், தில்லான முடிவை எடுத்தார் கோலி. விமர்சகர்கள் அவரது முடிவை கண்டு வியந்தனர். ஆனால், அது அதிர்ச்சி முடிவாக மாறியது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டாம் டி20 போட்டியில் ஆடிய அதே அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் நோர்ஜே நீக்கப்பட்டு, இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ரோஹித் சர்மா, தவான் துவக்கம் அளித்தனர். முதல் போட்டி போலவே ரோஹித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தார். 9 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா, பேரான் ஹென்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

தவான் அதிரடி

தவான் அதிரடி

அடுத்து தவான் அதிரடிக்கு மாறினார். 25 பந்தில் 36 ரன்கள் குவித்தார், அவர் ஆட்டமிழந்த பின், இந்திய அணி சரிவை சந்தித்தது. கோலி 9, ரிஷப் பண்ட் 19, ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆல் - ரவுண்டர்களும் வேஸ்ட்

ஆல் - ரவுண்டர்களும் வேஸ்ட்

அடுத்து வந்த ஆல் - ரவுண்டர்களும் அணிக்கு கை கொடுக்கவில்லை. க்ருனால் பண்டியா 4, ஜடேஜா 19, சுந்தர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் நீண்ட பேட்டிங் வரிசை திட்டம் மொத்தமாக பாயை விரித்து படுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து வந்த ஆல் - ரவுண்டர்களும் அணிக்கு கை கொடுக்கவில்லை. க்ருனால் பண்டியா 4, ஜடேஜா 19, சுந்தர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் நீண்ட பேட்டிங் வரிசை திட்டம் மொத்தமாக பாயை விரித்து படுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஹர்திக் பண்டியா ஏமாற்றம்

ஹர்திக் பண்டியா ஏமாற்றம்

அதிரடியாக ஆடுவார் என கடைசி வரை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த போது, 18 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹர்திக் பண்டியா. இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் வீரர்கள் ஜோர்ன் மற்றும் ஹென்ரிக்ஸ் குறைந்த ரன்கள் கொடுத்து தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

அடுத்து பேட்டிங் ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணி எந்த சிரமமும் இன்றி பேட்டிங் செய்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் எந்த வகையிலும் தென்னாப்பிரிக்க அணியை அச்சுறுத்தவில்லை.

டி காக் அசத்தல்

டி காக் அசத்தல்

துவக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் டி காக் அசத்தலாக ஆடி 52 பந்துகளில் 79 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 5 சிக்ஸர்கள் அடித்து அதிரடி ஆட்டம் ஆட, இந்திய பந்துவீச்சாளர்கள் அவரை வெளியேற்ற முடியாமல் தவித்தனர். பவுமா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்கா வெற்றி

தென்னாப்பிரிக்கா வெற்றி

16.5 ஓவர்களில் இந்தியா நிர்ணயித்த 135 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்கா. பவுமா சிக்ஸ் அடித்து போட்டியை முடித்தார். தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, September 23, 2019, 10:15 [IST]
Other articles published on Sep 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+