Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெல்லும்.. ஸ்ரீகாந்த் நம்பிக்கை

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெறும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்து, பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியின் பலம் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பும்ரா மற்றும் அக்சர் படேல் இருவரும் தென்னாப்பிரிக்க அணியை சமாளித்தார்கள். அப்போது கிளாஸன் வெறித்தனமாக விளையாடிய போதும், அந்த இருவரும் வெறும் நான்கு பந்துகளில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்."

Ind vs sa

"தற்போது அக்சர் படேல் அணியில் இணைவதால், இந்திய அணி மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவை விட வலிமையானது. ரபாடா இல்லாததால் அவர்களின் பந்துவீச்சு படை மிகவும் பலவீனமாக உள்ளது. கடந்த ஒருநாள் ஆட்டத்தில் கூட, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது."

"இந்திய பந்துவீச்சு படையை தென்னாப்பிரிக்காவை ஒப்பிட முடியாது. 350 ரன்களை இந்தியாவுக்கு எதிராக சேஸ் செய்ய முயற்சித்தாலும், பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்றோர் இருக்கும்போது அதை அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியுமா?" இந்திய அணி ஒரு அருமையான டி20 அணி.

தேவையான அனைத்து அம்சங்களும் இந்த அணியிடம் உள்ளன. எனினும், இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்க வேண்டும்" என்று ஸ்ரீகாந்த் கூறினார். ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கிய தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி இருப்பதாகவும், எனவே அவருக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அதிரடியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். அவர் அணியில் இல்லாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும், இந்திய அணி ஒட்டுமொத்தமாக மிக வலிமையாகவே இருக்கிறது" என்று கூறி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Sunday, December 7, 2025, 19:58 [IST]
Other articles published on Dec 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+