Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 20 ஒருநாள் போட்டிக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா.. ஆந்திரா வீரருக்காக தமிழக வீரர் நீக்கம்

விசாகப்பட்டினம்: தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 20 ஒருநாள் போட்டிகளில் டாசை இழந்து இருக்கின்றனர். இந்த சூழலில் 21வது போட்டியில் கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீசுகின்றோம்.

Ind vs sa

நாங்கள் நேற்று இரவு இங்கு பயிற்சி செய்தோம். அப்போது பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் பனிப்பொழிவு மாலை நேரத்திலே தொடங்கியது. ஆனால் இங்கு கொஞ்சம் தாமதமாக தான் வரும் என்று நினைக்கின்றேன். நாங்கள் இன்று சேசிங் செய்ய விரும்புகின்றோம். எனவே முதலில் பந்து வீச உள்ளோம்.

ரன்களை தற்காத்துக் கொள்ள கொஞ்சம் கடுமையாக இருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கின்றோம். நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் நன்றாகவே பேட்டிங் செய்தோம். நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கின்றது. எனினும் ஒரு சில விஷயத்தை சரி செய்ய வேண்டும். பில்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும்.

அது நடந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக திலக் வர்மாவை சேர்த்து இருக்கிறோம் என்று ராகுல் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்து விட்டால் நடுவரிசை வீரர்கள் ரன்களை குவிப்பார்கள். இந்த தொடர் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தருகின்றது. இன்றும் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போட்டியில் விறுவிறுப்பாக அமையும் என்ற நம்புகிறேன். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.பேட்டிங்கில் ரிக்கல்டன், பந்துவீச்சில் பார்ட்மேனும் வந்திருக்கிறார்கள். பர்கர் மற்றும் டோனி டிசோர்சி இரண்டு வாரம் காயம் காரணமாக எந்தவித போட்டியிலும் விளையாட மாட்டார்கள் என பவுமா அறிவித்துள்ளார்.

Story first published: Saturday, December 6, 2025, 13:17 [IST]
Other articles published on Dec 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+