தென்னாப்பிரிக்கா மண்ணில் கால் வைத்ததில் இருந்து பிரச்சனை.. ருதுராஜை வீட்டிற்கு அனுப்பிய பிசிசிஐ!
பார்ல்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நடக்கவுள்ளது. டிச.26ஆம் தேதி நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனிலும், ஜனவரி 3ஆம் தேதி நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் கேப் டவுனிலும் நடக்கவுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட வென்றதில்லை.

இதனால் இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி வரலாற்றை மாற்றி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ப்ரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் களமிறங்கியது முதலே ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் டி20 தொடரில் களமிறங்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடினார்.
2 போட்டிகளிலும் சொதப்பியதோடு, ஃபீல்டிங்கின் போது ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் காரணமாக 3வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் களமிறங்கினார். இதனையடுத்து பிசிசிஐ மருத்துவ குழு தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு விரலில் ஏற்பட்ட காயம் குறித்து சோதனை செய்யப்பட்டது.
இந்த காயம் 2 போட்டிகளில் தொடங்குவதற்கு முன்பாக குணமடைய வாய்ப்பில்லை என்று பிசிசிஐ மருத்துவ குழுவுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம் ருதுராஜ் கெய்க்வாடை டெஸ்ட் அணியில் இருந்து விலக்கியதோடு, வீட்டிற்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Friday, December 22, 2023, 14:57 [IST]
Other articles published on Dec 22, 2023


Click it and Unblock the Notifications